உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய பங்குச் சந்தை புள்ளிகள் சரிவு : காரணம் என்ன?

இந்திய பங்குச் சந்தை புள்ளிகள் சரிவு : காரணம் என்ன?

மும்பை: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் புள்ளிகள் குறைந்தது. பட்ஜெட்டில் பங்கு பத்திர பரிவர்த்தனை வரி (செக்யூரிட்டிஸ் டிரான்ஸாக்ஷன் டாக்ஸ்) மற்றும் நீண்டகால முதலீட்டு வருவாய் வரி (எல்.டி.சி.ஜி) ஆகியவற்றில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்த சில வினாடிகளில் பங்குச்சந்தைகளில் புள்ளிகள் குறையத் துவங்கின.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் செய்தபோது, இந்திய பங்குச்சந்தைகள் லேசாக குறைந்தது. சென்செக்ஸ் 1,266.17 புள்ளிகள் குறைந்து 79,235.91 ஆக வர்த்தகம் ஆனது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் 435.05 புள்ளிகள் குறைந்து 24,074.20 ஆக வர்த்தகமானது. பின்னர் படிப்படியாக பங்குச்சந்தை ஏற்றம் கண்டது. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 73.04 புள்ளிகள் குறைந்து 80,429.04 புள்ளியாகவும், நிப்டி 30.20 புள்ளிகள் குறைந்து 24,479.05 புள்ளியாகவும் வர்த்தகமாகின.பொதுவாக பட்ஜெட் தாக்கலின்போது மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களை பொறுத்து சென்செக்ஸ் உயர்வை சந்திக்கும் நிலையில், இன்று திடீரென குறைந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பின. அதற்கு காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் வாசித்தபோது, பங்கு பத்திர பரிவர்த்தனை வரி (செக்யூரிட்டிஸ் டிரான்ஸாக்ஷன் டாக்ஸ்) 0.02 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்த சில வினாடிகளில் பங்குச்சந்தைகளில் புள்ளிகள் குறையத் துவங்கியுள்ளது.அதேபோல், நீண்டகால முதலீட்டு வருவாய் வரி (எல்.டி.சி.ஜி) 20 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த வரிகள் மாற்றத்தால் முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை விற்று முதலீட்டை திரும்ப பெற்று வந்ததாலும் பங்குச்சந்தை புள்ளிகள் குறைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Srinivasan Krishnamoorthy
ஜூலை 23, 2024 15:55

sensex, nifty ended positively only. there was an opportunity to buy mid day


செந்தமிழ் கார்த்திக்
ஜூலை 23, 2024 13:29

இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் ஏமாளிகள். எல்லோரும் உலக பங்கு சந்தைக்கு மாறுங்கள். இல்லையேல் தொடர்ந்து ஏமாற்ற படுவீர்கள்.


ஆரூர் ரங்
ஜூலை 23, 2024 13:37

அரேபிய சந்தைக்கா? அதுதானே உம் ஆசை?


saravan
ஜூலை 23, 2024 13:58

யாரு கூப்பிட்டா


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 23, 2024 14:41

பங்குச்சந்தையின் தாற்காலிக சரிவிற்கு காரணம் செய்தியில் உள்ளது.. முதலில் அது புரிந்ததா ??


Venkates.P
ஜூலை 23, 2024 14:44

பங்கு அதை என்னனு தெரியாத 200 ரூபாய் அடிமைகள் எல்லாம் பேசுது.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 23, 2024 18:26

உம்ம குரு சோர்ஸின் ஆட்கள் அதானி பங்குகளை சரியவைத்து அதில் விளையாடவில்லையா .... அதே டெக்கினிக்கை கையாண்டு பாரும் ....


Duruvesan
ஜூலை 23, 2024 19:31

மூடிட்டு போ மூரக்ஸ் ,எனக்கு எப்படி டிரேடிங் பண்ணனும்னு தெரியும்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ