தமிழகத்தில் 19ம் தேதி வரை கனமழை நீடிக்கும்; இந்திய வானிலை ஆய்வு மையம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: வரும் 19ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிச.,16 முதல் 19 வரையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் கனமழையும், டிச ., 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் கனமழை முதல் அதி கனமழை பெய்யும்.டிச., 16 மற்றும் 17 தேதிகளில் மேற்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளிலும், டி.,17 மற்றும் 18ம் தேதிகளில் மன்னார் வளைகுடா பகுதிகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். டிச., 16: ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் கரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும்.டிச., 17: நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும். அரியலூர், தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, ஆந்திர கடலோரப் பகுதிகள், ராயலசீமா பகுதிகளில் கனமழை பெய்யும். டிச.,18: கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்யும். டிச.,19: கேரளாவில் சில இடங்களில் கனமழை பெய்யும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.