உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,யில் கனமழையால் தொடரும் துயரம்; 2 நாட்களில் மின்னல் தாக்கி 25 பேர் பலி!

உ.பி.,யில் கனமழையால் தொடரும் துயரம்; 2 நாட்களில் மின்னல் தாக்கி 25 பேர் பலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி.,யில் 14 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில், மின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. திடீர் வானிலை மாற்றம் காரணமாக பல மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. காஸ்கஞ்ச் மற்றும் பதேபூர் பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.மரங்கள் வேரோடு சாய்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளன. அடுத்த இரண்டு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.கடந்த 2 நாட்களில் 14 மாவட்டங்களில் மின்னல் தாக்கி, எட்டு பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடங்குவர்.மின்னல், புயல் அல்லது மழை தொடர்பான பேரிடர்களால் மனிதர்கள் அல்லது விலங்குகள் உயிரிழந்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும். பயிர்கள் சேதம் குறித்து கணக்கீடு நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஜூன் 17, 2025 07:57

டபுள் இஞ்சின் சர்க்கார் மட்டும் இல்லேன்னா....


Ramaraj P
ஜூன் 17, 2025 07:32

வீட்டிற்கு அருகில் உயர்ந்த மரமோ அல்லது குறைந்த அளவில் கூட தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுவும் இடி மின்னலில் இருந்து பாதுகாக்கும்.


Sudha
ஜூன் 16, 2025 20:12

மக்கள் நலனுக்கு எவ்வளவு செய்யலாம். உபயோகமற்ற பல செயல்கள் வட மாநிலங்களில் நடக்கின்றன. அறிவியல் சார்ந்த நிகழ்வுகள் குறைவு. முக்கியமாக மாநிலத்தை இரண்டு மூன்று மாநிலங்களாக பிரித்து முன்னேற்ற வேண்டும். மக்கள் தொகை கட்டுக்குள் வரவேண்டும். சிறு தொழில்களை வளர்க்க வேண்டும்.


சோழநாடன்
ஜூன் 16, 2025 19:56

யாகங்கள் வளர்த்து கடவுளின் அருளால் வேதவிற்பனர்கள் மழையைத் தருவிக்கிறார்கள் என்று காலங்காலமாக இந்த நடைமுறை உள்ளது. அவ்வப்போது செய்தித்தாளிலும் யாகத்தால் மழை பொழிந்தது என்று செய்திகள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றது. கடும் மழையை, அதிக அளவு மழையைத் தேவைக்கேற்ற வகையில் யாகங்கள் வளர்த்து மழையைக் கட்டுப்படுத்த வேதவிற்பனர்கள் அதற்குரிய முயற்சியில் இறங்கினால் ஏழை மக்கள் காப்பாற்றப்படுவார்கள். இராமபிரான் இருக்கும் உ.பி.யில் இந்த மழையால் ஏற்படும் அவலத்திற்கு வேதவிற்பனர்கள் முடிவு கட்டவேண்டும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூன் 16, 2025 19:08

நான் உத்தரபிரதேசத்தில் சிலகாலம் வாழ்ந்திருக்கிறேன். அங்கு நம் ஊர் போல அல்ல. மழைக்காலத்தில் உடல்நடுங்கும் அளவிற்கு மிகக்கடும் இடி மின்னல் ஏற்படும். மேற்கு, மத்திய மற்றும் வடமாநிலங்களில் எப்போதும் கடும் மழை, புழுதிப்புயல், கடும் பனி, கடும் வெயில் என அனைத்தும் பருவகாலத்திற்கு ஏற்ப அதிதீவிரமாக இருக்கும்.


Nada Rajan
ஜூன் 16, 2025 18:35

கனமழைக்கு அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும்


புதிய வீடியோ