உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தரபிரதேசத்தில் கொட்டியது கனமழை; கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் கொட்டியது கனமழை; கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக 34 பேர் உயிரிழந்தனர்.உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. திடீர் வானிலை மாற்றம் காரணமாக பல மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. காஸ்கஞ்ச் மற்றும் பதேபூர் பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.மரங்கள் வேரோடு சாய்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளன. நொய்டாவில், பல மரங்கள் வேரோடு சாய்ந்து வாகனங்கள் மீது விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை மற்றும் புயல் காரணமாக 34 பேர் உயிரிழந்தனர். புயல், மழை மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நிவாரணப் பணிகளை முழு வேகத்தில் மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தி உள்ளார்.மின்னல், புயல் அல்லது மழை தொடர்பான பேரிடர்களால் மனிதர்கள் அல்லது விலங்குகள் உயிரிழந்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும் என யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

venugopal s
மே 23, 2025 07:29

கும்பமேளாவில் அறுபத்தைந்து கோடி பேரை சமாளித்த உத்தரப் பிரதேச பாஜக அரசுக்கு ஒரு நாள் மழையை சமாளித்து மக்களை காப்பாற்ற முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்?


venugopal s
மே 22, 2025 20:13

ஒரு நாள் மழைக்கே முப்பத்து நான்கு பேர் இறந்தனர் என்றால் மாநில அரசின் இயந்திரம் எந்தளவிற்கு இருக்கிறது என்று தெரிகிறது!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை