உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹெலிகாப்டர் விபத்து விமானிகள் உட்பட மூவர் பலி

ஹெலிகாப்டர் விபத்து விமானிகள் உட்பட மூவர் பலி

புனே, மஹாராஷ்டிராவில், தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில், இரண்டு விமானிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தின் பவுதான் புத்ருக் என்ற பகுதியில், நேற்று காலை பறந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்தது. மீட்புக்குழுவினர் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.அதன்பின் ஹெலிகாப்டரின் சிதைந்த பகுதிகளில் மீட்புக்குழு ஆய்வு செய்ததில், விமானிகள் பரம்ஜித் சிங், ஜி.கே.பிள்ளை ஆகிய இருவருடன், பொறியாளர் ஒருவர் என, மொத்தம் மூன்று பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், டில்லியைச் சேர்ந்த ஹெரிடேஜ் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. இதை, தேசியவாத காங்கிரஸ் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்ததையும் போலீசார் கண்டறிந்தனர். இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் எம்.பி.,யும், மாநில தலைவருமான சுனில் தாட்கரே, மும்பையில் இருந்து ராய்காட்டிற்கு இந்த ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை