உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதுச்சேரியில் ஜனவரி முதல் ஹெல்மெட் கட்டாயம்! நடவடிக்கைக்கு ரெடியாகும் போலீஸ்

புதுச்சேரியில் ஜனவரி முதல் ஹெல்மெட் கட்டாயம்! நடவடிக்கைக்கு ரெடியாகும் போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: புதுச்சேரியில் 2025 ஜனவரி முதல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.புதுச்சேரியில் கடந்த 2017ம் ஆண்டு ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதாகும். ஆனால், அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே பின்னர் வாபஸ் பெறப்பட்டது.அதன்பின்னர் கவர்னராக இருந்த கிரண்பேடி, கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். ஆனாலும், குறைந்த எண்ணிக்கையிலான வாகன ஓட்டிகள் அணிந்து சென்றனர்.இந் நிலையில் 2025 ஜனவரி முதல் மீண்டும் கட்டாய ஹெல்மெட் திட்டத்தை போலீசார் கொண்டு வருகின்றனர். ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதை நடைமுறைப்படுத்த போக்குவரத்து போலீசார் இறங்கி உள்ளனர். அதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் இருக்கும் சூழலில், விதிகளை பின்பற்றி, வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

santhosh
டிச 14, 2024 22:01

மழைக்கு 5000 குடுத்துட்டு ஹெல்மெட் இல்லைன்னு பறிக்க போறாங்க


nagendhiran
டிச 14, 2024 14:43

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மட்டுமே? சட்டம் ஓட்டையை தேடும் மக்கள் அதிகம்என்னையும் சேர்த்தே இருக்கிறார்கள்.


visu
டிச 14, 2024 14:09

ஒரு நபர் ஒரு அரசு அலுவலகம் வைத்தால் அவருடைய ஹெல்மெட் வைக்க பாதுகாப்பு இடம் வைத்தால் அனைவரும் அணிய தயங்க மாட்டார்கள் இப்போதைக்கு நீங்கள் வெளியே விட்டு சென்றால் அவசரத்துக்கு வேறொருவர் எடுத்து மாட்டி கொண்டு என்று விடுவார்


பாமரன்
டிச 14, 2024 13:37

ஓஹோ காந்தி செத்துட்டாரா...??? நாடு முழுவதும் அமலில் உள்ளது ஹெல்மெட் ரூல்...... புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசம் தான் டில்லி... அங்கே பல தசாப்தமா டூ வீலர்ல பயணம் செய்யும் இரண்டு பேரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ரூல் உள்ளது... நாம் இதிலும் லேட்...


N Ganapathy Subramanian
டிச 14, 2024 13:19

,போலீஸ்க்கு கொண்டாட்டம். டெய்லி கைச்செலவுக்கு கஷ்டம் இருக்காது.


சமீபத்திய செய்தி