உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கோரி ஹேமந்த் சோரன் மனு

பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கோரி ஹேமந்த் சோரன் மனு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கோரி முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கோர்ட்டில் மனு செய்துள்ளார்.ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், இவர் மீது நிலக்கரி சுரங்கம், மற்றும் நில மோடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து நேரில் ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு 8 முறை சம்மன் அனுப்பியது.ஆஜாராக நிலையில் கடந்த ஜன.31ம் தேதி கவர்னரை சந்தித்து முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் அளித்தார்.உடனே அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கினார். இவரது கோர்ட் காவல் பல முறை நீட்டிக்கப் பட்ட நிலையில் மீண்டும் ராஞ்சி பி.எம்.எல்., சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படார். அவரை பிப்.22 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டார்.இதையடுத்து அதே கோர்ட்டில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என மனு செய்தார். ஹே மந்த் சோரன் சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜிவ் ரஞ்சன் ஜாமின் மனுவை தாக்கல் செய்தார்.இந்நிலையில் கோர்ட் காவல் இன்று நிறைவடைய உள்ள நிலையில் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் தன்னை பங்கேற்க அனுமதி கோரி மனு செய்துள்ளார். இவரது மனு இன்று விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kuppan
பிப் 22, 2024 17:47

இவன் திருடன் அனாலும் அதில் உள்ள ஒரு நேர்மை பிடித்து இருக்கு, கைதாகும் போது, முதல்வர் பதவியை ராஜினாமா செயித்தான், பட்ஜெட் சமயம் அவன் மாநில பட்ஜெட் கூட்டத்தில் பங்கு கொள்ள நினைக்கிறான், அனால் இங்கு பாருங்கள் உலக மகா உத்தமர் போல் வேடம் இடும் விடியல் கூட்டம், ஊழல் குற்றத்தில் கைதானாலும் மந்திரியாய் இருப்பார், முதல்வரின் மகன் என்ற ஒரு தகுதியை வைத்து எல்லா துறை மந்திரி வேலையை, எல்லா துறை அறிவுப்பு, திறந்து வைத்தால் கலந்து கொள்வார் ஆனால் மாநிலத்தின் முக்கியமான பட்ஜெட்-ல் கலந்து கொள்ள மாட்டார்.


duruvasar
பிப் 22, 2024 07:51

அதுக்கு முன்னாடி தங்கை பொண்ணு வளைகாப்பு இருக்கு, முதலில் அதுக்கு அனுமதி கேளுங்கள்.தாய்மாமன் நீங்க இல்லாம சடங்கு எப்படிங்க நடத்துவது.


rama adhavan
பிப் 22, 2024 07:34

இவர் கட்சி தான் ஆட்சி நடத்துகிறது. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இவர் வேண்டுமானால் டீவீயில் பார்த்துக்கொள்ளட்டும். சிறையில் இல்லாமல் மருத்துவ மனையில் I C U வார்டில் இருப்பது போல் நினைத்துக் கொள்ளட்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை