உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் இன்று (நவ. 28ல்) பதவியேற்றார். இவ்விழாவில் ராகுல், உதயநிதி, மம்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த 20 மற்றும் 23ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்தது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் நான்கு இடங்களிலும் வென்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து, , கவர்னர் சந்தோஷ் காங்வாரை சந்தித்த ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m75zhv0g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கவர்னரின் ஒப்புதலை அடுத்து, ஜார்க்கண்டில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் சோரன், இன்று (நவ.28ம் தேதி) முதல்வராக பதவியேற்றார்.பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல், அக்கட்சி தேசிய தலைவர் கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழக துணை முதல்வர் உதயநிதி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Barakat Ali
நவ 28, 2024 22:33

உன் நண்பன் யாரென்று சொல் .... உன்னைப்பற்றிச் சொல்கிறேன் என்பார்கள் .... ஹேமந்த் சோரன் துள்ளக்காரின் நண்பர் .....


Narasimhan
நவ 28, 2024 18:38

தேசிய தத்தியுடன் பிராந்திய தத்திகள் ஒரே மேடையில்


Indian
நவ 28, 2024 17:17

வாழ்த்துக்கள் , இந்தியா முழுமையும் இந்த கூட்டணி ஆட்சி பிடிக்கும் ..


sankar
நவ 28, 2024 18:36

சரி தம்பி...


Sathyanarayanan Sathyasekaren
நவ 29, 2024 06:24

சொந்த பெயரில் கருத்து எழுத வக்கில்லாத உன் கனவில் தான்.


sankar
நவ 28, 2024 17:15

சில நேரங்களில் சில தவறுகள் நடப்பதுண்டு


N Srinivasan
நவ 28, 2024 17:12

போன முறை பதவி ஏற்றபோது பாவம் சைக்கிள் ஒட்டிக்கொண்டு வந்தார். இந்த முறை பரவாயில்லை BMW கார் மாறிவிட்டார் இப்படித்தான் வளர்ச்சி என்பது இருக்கவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை