உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனி வருமான வரியை அமைச்சர்களே செலுத்த வேண்டும்: ம.பி., அரசு முடிவு

இனி வருமான வரியை அமைச்சர்களே செலுத்த வேண்டும்: ம.பி., அரசு முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: ம.பி.,யில் அமைச்சர்களின் வருமான வரியை அரசே செலுத்தும் நடைமுறைக்கு முடிவு கட்டப்பட்டு உள்ளது. இனி மேல் அமைச்சர்களே அதனை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.1972 ம் ஆண்டு அமைச்சர்களின் வருமான வரியை அரசே செலுத்தும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி கடந்த 52 ஆண்டுகளாக , முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வருமான வரியை அரசு செலுத்தி வந்தது. இந்த திட்டத்திற்கு மாநில அரசு இன்று ( ஜூன் 25) முடிவு கட்டியது.முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், 1972 ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தை ரத்து செய்வது என்றும், இனிமேல் அமைச்சர்களே, தங்களது சம்பளத்தில் இருந்து அவர்களது வருமான வரியை செலுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதற்கான முடிவு ஒரு மனதாக எடுக்கப்பட்டது.இந்நாள் வரை அமைச்சர்களின் வருமான வரியை செலுத்துவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்ட நிலையில், மாநில அரசின் புதிய முடிவால், அந்த பணம் மிச்சமாகும். கடந்த 2023 -24 நிதியாண்டில் முதல்வர், சபாநாயகர், அமைச்சர்களின் வருமான வரியை செலுத்த ரூ.79 லட்சம் ஒதுக்கப்பட்டு இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இதற்காக ரூ.3.5 கோடி செலவானதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 25, 2024 23:15

தமிழகத்திலும் இதேபோல் செய்யவேண்டும். எதற்கு எடுத்தாலும் குஜராத்தை பார், மத்திய பிரேதேசத்தை பார் என்று சொல்லும் கொத்தடிமைகள், இப்போது மத்திய பிரதேசத்தை பார்த்து அதே போல் தமிழகத்திலும் செய்யவேண்டும்.


Anantharaman Srinivasan
ஜூன் 25, 2024 22:32

மத்தியபிரதேச மந்திரிகளின் வருமானவரி நிலவரம் வெளிச்சமாச்சு. Then what about Tamil nadu and other states..


Ramesh Sargam
ஜூன் 25, 2024 22:15

சரியான முடிவு. இவ்வளவு நாட்கள் அரசு கட்டிய வரிப்பணத்தையும் அமைச்சர்கள் திருப்பித்தரவேண்டும் என்றும் ஒரு அறிக்கை விடவேண்டும்.


ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 21:53

நடிகர்கள் கூட தங்கள் சம்பளத்துக்கான ஜிஎஸ்டி யை தயாரிப்பாளர்களே கட்ட வேண்டும் என்று ஒப்பந்தம் போடுகின்றனர். கலிகாலம்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 25, 2024 21:27

முதலில் தமிழ் நாட்டில் அமைச்சர் பெருமக்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் தேவைப்பட்டால் உடன் பிறப்புகள் ஆகியோருக்கு ஆண்டு தோறும் வருமானவரியை யார் செலுத்துகிறார்கள் என்பதை முதலில் கண்டறிந்து வெளியிடுங்கள்.


sankaranarayanan
ஜூன் 25, 2024 21:03

அடிஆத்தி என்னடா இது பட்டப்பகல் கொள்ளையாகவே பகல் கொள்ளையாகவே உள்ளதே இதுவரை பாமர மக்களுகே தெரியாதே பிறகு நாம் மட்டும் வரி ஏன் செலுத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறதே முதலில் நாட்டிலுள்ள எல்லா மாநிலங்களிலும் மத்தியிலும் உள்ள அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் - எம்.பிக்கள் அனைவருமே இனி வருமான வரி செலுத்த வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரவேண்டும் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு வேண்டுமானால் விதிவிலக்கு அளிக்கலாம்.


GMM
ஜூன் 25, 2024 20:16

தனிநபர் வருமான வரியை அரசு எப்படி செலுத்த முடியும்.? அமைச்சரின் பிற வருமான விவரம் எப்படி இணைக்க பட்டது. அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்த வேண்டும். பல கவர்னர், தலைமை செயலாளர், தணிக்கை குழு, வருமான வரி துறை மாறியும் ஏன் எதிர்க்கவில்லை? மத்திய அரசு, மற்ற மாநிலங்களில் நிலமை எப்படி? இட ஒதுக்கீடு மூலம் தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. போட்டி தேர்வில் வெற்றி இல்லை என்றால் மட்டும் அதன் அடிப்படையில் ஒவ்வொரு முறையும் இட ஒதுக்கீட்டில் விகிதம் மாற்றி, முற்று புள்ளி வைக்க வேண்டும். தற்போது தடை இன்றி MLA, MP ஓய்வு ஊதியம்? செலுத்திய வரியை வட்டியுடன் பிடித்தம் செய்து, கருவூலத்தில் சேர்க்கவும். காங்கிரஸ் நாட்டிற்கு மிக பெரிய வில்லங்கம்?


...
ஜூன் 25, 2024 19:32

வருமானத்தையும் தந்து வருமான வரியும் அமைச்சர்களுக்கு அரசே கட்டுகிறதா ?அவ்வளவு நியாயமான அமைச்சர்களா நம்நாட்டில் இருக்காங்க நான் என்னையே ஒருமுறை கிள்ளிபார்க்கிறேன்


adalarasan
ஜூன் 25, 2024 22:15

பாவம் ஏழைங்க? ரசாங்கம் காட்டுது .எல்லாரும் கோடி கோடி யா வைச்சிகிட்டு, வருமான வரி,SADARANA ஒரு அரசாங்க ஊழியர் காட்டும் பொது, இவர்களுக்கு என்ன? ம, பி. அரசின் முடிவு சரியானது?


S. Narayanan
ஜூன் 25, 2024 19:30

நாசமா போச்சு. 52 வருஷமா அரசு செலுத்த என்ன காரணம். அப்போ சுமார் ,42 வருஷமா காங்கிரஸ் அரசு நடை பெற்றதால் அவர்கள் கொள்ளை அடித்தது போதாது என்று அமர்ச்சர்களின் வரியையும் செலுத்தி அவர்களுக்கு சொத்து சேர்க்க உதவி இருக்கிறது. பிஜேபி வந்ததால் அந்த நடைமுறை கொஞ்சம் கொஞ்சமாக மரும் போல தெரிகிறது. எப்படியோ மக்களுக்கு அதிக உதவிகள் நிச்சயம் கிடைக்குமென்று தெரிகிறது. இந்த முறையை இந்தியா முழுதும் மோடிஜி அமுல் படுத்துவார் என்று நினைக்கிறேன்.


Duruvesan
ஜூன் 25, 2024 20:01

சும்மா காங்கிரஸ் ஏன்? அங்க 15 வருடமா என்ன பண்ணிட்டு இருந்தாரு? மோடி 25 வருசமா என்ன பண்ணிட்டு இருக்காரு?


ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 19:01

பத்தாண்டுகளாக வருமான வரியைக் கட்ட மறந்து விட்டேன் என பார்லிமெண்டில் ஒப்புக் கொண்டவர் இந்திரா அமைச்சரவையிலிருந்த ஜெகஜீவன்ராம்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை