உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி சட்டசபை தேர்தல்: வி.ஐ.பி., வேட்பாளர்களின் நிலை இதோ!

டில்லி சட்டசபை தேர்தல்: வி.ஐ.பி., வேட்பாளர்களின் நிலை இதோ!

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில், முக்கிய தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா தோல்வி அடைந்தனர்.

புது டில்லி

@இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ் வர்மா, காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் ஷீலா திட்சீத்தின் மகன் சந்தீப் தீட்சித் ஆகியோர் களம் இறங்கினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=idyfxvqc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பர்வேஷ் சாஹிப் சிங் -30,088 ஓட்டுகளும்,கெஜ்ரிவால் 25,999 ஓட்டுகளும் பெற்றனர். பா.ஜ., வேட்பாளர் 4,089 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜங்புரா

இந்த தொகுதியில், ஆம்ஆத்மி சார்பில், மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா போட்டியிட்டார். பா.ஜ., சார்பில் கர்தார் சிங் தன்வார் போட்டியிட்டார். இந்த தொகுதியில் போட்டியிட்ட ஆம் கட்சி கட்சியின் முன்னணி தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா 600 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

கிரேட்டர் கைலாஷ்

இத்தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜூம், பா.ஜ., சார்பில் ஷிகா ராயும் போட்டியிட்டனர். இதில் ஷகா ராய், 49,594 ஓட்டுகள் பெற்று, 3,188 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மால்வியா நகர்

இந்த தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில், மூத்த தலைவர் சோம்நாத் பாரதி போட்டியிட்டார். இவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில் சதீஷ் உபாத்யாய், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜிதேந்திர குமார் கோச்சார் ஆகியோர் போட்டியிட்டனர். பா.ஜ., வேட்பாளர் 39,564 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஆம் ஆத்மியின் சோம்நாத் பாரதிக்கு 37,433 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. ஓட்டு வித்தியாசம்-2,131

கல்காஜி தொகுதி

இந்தத் தொகுதியில் தற்போதைய டில்லி முதல்வர், அதிஷி ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும், பா.ஜ., சார்பில் முன்னாள் எம்.பி., ராமேஷ் பிதூரியும் போட்டியிட்டனர். இந்த தொகுதியில், போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான அதிஷி வெற்றி பெற்றார்.

சத்தர்பூர் தொகுதி

இந்த தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் பிரம் சிங் தன்வார் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் கர்தார் சிங் தன்வாரும், காங்கிரஸ் சார்பில் ராஜேந்தர் சிங் தன்வாரும் போட்டியிட்டனர். இதில், பா.ஜ., வேட்பாளர் கர்தார் சிங் தன்வார் 80,469 ஓட்டுக்கள் பெற்று, ஆம் ஆத்மி வேட்பாளர் பிரம் சிங் தன்வாரை 6,239 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். காங்கிரஸ் வேட்பாளர் 6,601 ஓட்டுக்கள் பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ram
பிப் 08, 2025 12:25

athishi நிற்கும் தொகுதியில் பிஜேபி முன்னிலை ஆனால் நீங்கள் AAP முன்னிலை என்று போடுகிறீர்கள்


Laddoo
பிப் 08, 2025 11:47

என்னாங்கோ இது? ராகுல் கிளீன் போல்டா? குஜிலிபாத் டுபாகூர் ரொஹிங்கியாஸ் சப்போர்டுடன் லீடிங்கா?


rama adhavan
பிப் 08, 2025 11:42

காங்கிரஸுக்கு எங்கும் தோல்வி : எதிலும் தோல்வி.


Ray
பிப் 08, 2025 12:03

காங்கிரஸ் தனித்து நிற்கிறது.


Ray
பிப் 08, 2025 12:03

காங்கிரஸ் தனித்து நிற்கிறது.


Ray
பிப் 08, 2025 12:02

காங்கிரஸ் தனித்து நிற்கிறது.


Muralidharan S
பிப் 08, 2025 11:42

ஊழல் அகற்றுகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து, ஊழல்... ஊழல் என்று ஊறி ஆட்சி நடத்திவந்த ஆம் ஆத்மீ க்கும் கான்-கிராஸ்க்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லை. அந்த இரண்டு தேசத்துரோக கட்சிகளும் அழிந்து போவது நமது தேசத்திற்கு நல்லது.


புதிய வீடியோ