உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாடகை வீட்டில் ரகசிய கேமரா: வீட்டு உரிமையாளர் மகன் சிக்கினார்

வாடகை வீட்டில் ரகசிய கேமரா: வீட்டு உரிமையாளர் மகன் சிக்கினார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : டில்லியில் வாடகை வீட்டின் படுக்கை அறை, குளியல் அறை ஆகியவற்றில் ரகசிய கேமராக்களை பொருத்தியிருந்த வீட்டு உரிமையாளர் மகன் கைது செய்யப்பட்டார்.கிழக்கு டில்லி ஷகர்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த இளம்பெண், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். வெளியூர் செல்லும்போது வீட்டுச் சாவியை, வீட்டு உரிமையாளர் மகன் கரண், 30, என்பவரிடம் கொடுத்து விட்டுச் செல்வார்.சமீபநாட்களாக தன் 'வாட்ஸாப்' செயலியில் சில சந்தேகத்திற்கிடமான தகவல்கள் வந்ததால் சந்தேகம் அடைந்தார். தன் வாட்ஸாப் செயலியுடன் இணைக்கப்பட்ட பிற சாதனங்கள் குறித்து ஆராய்ந்தார். அவரது வாட்ஸாப் கணக்கு வேறு ஒரு லேப்டாப் வழியாக கண்காணிக்கப்படுவதை அறிந்தார். இதையடுத்து, அந்த லேப்டாப் இணைப்பைத் துண்டித்தார். வீடு முழுதும் ஆய்வு செய்ததில், குளியலறை பல்பு ஹோல்டரில், ரகசியக் கேமரா பொருத்தப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தார். இதையடுத்து, போலீசில் புகார் செய்தார். போலீஸ் குழு வீடு முழுதும் சல்லடை போட்டு அலசியது. படுக்கை அறை பல்பு ஹோல்டரிலும் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளியூர் செல்லும்போதெல்லாம் அதே கட்டடத்தில் மற்றொரு தளத்தில் வசிக்கும் வீட்டு உரிமையாளர் மகன் கரணிடம் சாவியைக் கொடுத்து விட்டுச் செல்வதை போலீசாரிடம் கூறினார்.விசாரணையில், மூன்று மாதங்களுக்கு முன் ரகசிய கேமராக்களை படுக்கையறை மற்றும் குளியலறையில் பொருத்தியதை ஒப்புக் கொண்டார். கரண் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை சேமித்து வைத்த இரண்டு லேப் - டாப்களை அவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கரண், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாற்றுத் திறனாளியும், பட்டதாரியுமான கரண், ஏழு ஆண்டுகளாக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 25, 2024 10:35

சட்டம் அவனை ஜாமீனில் விட்டுவிடும் ....... வெளியே வந்து இந்தப்பெண்ணை கணக்குத் தீர்ப்பான் ..... குற்றவாளிகள் பெருகக் காரணமே சட்டங்கள்தான் ...... யோகி ஆதித்யநாத்தின் புல்டோசர் பீனல் கோட் - BPC - தான் சரி .......


subramanian
செப் 25, 2024 08:29

வக்கிர புத்தி, கெட்ட புத்தி கொண்டவர்களிடம் நவீன, உயர்தர வசதிகள் கிடைக்காமல் நம் மகரிஷிகள் எதற்காக மறைத்து வைத்திருந்தார்கள் என்று இப்போது நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.


Sudha
செப் 25, 2024 07:20

Delhi is unfit to be the capital of India


karthik
செப் 25, 2024 08:44

வேறு எங்கும் இதுபோல நடக்கவில்லை என்கிறீர்களா? தமிழ் நாட்டில் இல்லை என்கிறீர்களா? தமிழ் நாட்டில பொள்ளாச்சி சம்பவம் தெரியுமா?


Arul. K
செப் 25, 2024 06:50

இன்னும் 7 ஆண்டு ஆனாலும் தேர்வாக முடியாது. புத்தி அப்படி


Kasimani Baskaran
செப் 25, 2024 05:22

வாடகைக்கு இருப்பவர்களை கண்ணியமாக நடத்தக்கூட தெரியாத அளவுக்கு என்ன ஒரு வன்மம்.


முக்கிய வீடியோ