உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடன்காரர்களுக்கு பயந்து குடும்பத்துடன் தலைமறைவு

கடன்காரர்களுக்கு பயந்து குடும்பத்துடன் தலைமறைவு

மைசூரு: மைசூரின், கே.ஜி., கொப்பலு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ், 35. இவரது மனைவி பவானி, 28. தம்பதிக்கு பிரேக்ஷா, 3, என்ற மகள் உள்ளார். மகேஷின் தந்தை மகாதேவப்பா, 65, தாய் சுமித்ரா, 55, ஆகியோரும் மகனுடன் வசிக்கின்றனர்.குடும்ப தேவைக்காக மகேஷ், பல இடங்களில் கடன் வாங்கினார். இதை அடைக்க முடியாமல் அவதிப்பட்டார். கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்தனர். இவர்களுக்கு பயந்து மகேஷ் இரண்டு நாட்களுக்கு முன்பு, இரவோடு இரவாக தன் குடும்பத்துடன் மாயமானார்.இவர்களை பற்றி எந்த தகவலும் தெரியாததால், பவானியின் சகோதரர் ஜெகதீஷ், சரஸ்வதிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். காணாமல் போன குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ