உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக அரசுக்கு உயர் நீதிமன்றம் 9 கேள்விகள்!

கர்நாடக அரசுக்கு உயர் நீதிமன்றம் 9 கேள்விகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: ஆர்.சி.பி., கிரிக்கெட் அணியின் வெற்றி விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் கர்நாடக உயர் நீதிமன்றம், அரசுக்கு சரமாரியாக ஒன்பது கேள்விகளை எழுப்பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவின் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த 4ம் தேதி, ஆர்.சி.பி., அணி ஐ.பி.எல்., கோப்பையை வென்றதை கொண்டாடும் நிகழ்ச்சி நடந்தது. மைதானத்தின் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்தனர்.இது குறித்து, கர்நாடக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து 5ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியது. உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி காமேஸ்வர் ராவ், நீதிபதி சி.எம்.ஜோஷி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி அளித்த பதிலை கேட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மருத்துவ வசதி

இந்நிலையில் விசாரணையின்போது, ஒன்பது கேள்விகளை அரசு தரப்புக்கு உயர் நீதிமன்றம் எழுப்பியது. அதன் விபரம்:1வெற்றி கொண்டாட்டத்தை நடத்த முடிவு செய்தது யார்? எப்போது? நிகழ்ச்சி நடத்துவது பற்றி முறைப்படுத்தப்பட்டது எப்படி?2போக்குவரத்தை ஒழுங்குபடுத்த எடுக் கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?3கூட்டத்தை ஒழுங்குபடுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?4மருத்துவம் உள்ளிட்ட என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருந்தன?5மக்கள் எண்ணிக்கை குறித்து முன்கூட்டியே கணிக்கப்பட்டதா?6காயம் அடைந்தவர்களுக்கு சம்பவ இடத்தில் மருத்துவ நிபுணர்கள் உரிய சிகிச்சை அளித்தனரா? இல்லையென்றால் ஏன் அளிக்கப்படவில்லை?7காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எவ்வளவு நேரம் ஆனது?8இதுபோன்ற கொண்டாட்டங்களில், 50,000க்கும் மேற்பட்டோர் கூடினால், கூட்டத்தை நிர்வகிக்க ஏதேனும் வழிகாட்டுதல் வகுக்கப்பட்டு உள்ளதா?9நிகழ்ச்சி நடத்த எப்போது அனுமதி கோரப்பட்டது?மேற்கண்ட, ஒன்பது கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். இவற்றுக்கு உரிய பதில்களை அறிக்கையாக, 10ம் தேதி நடக்கும் விசாரணையின்போது, அரசு தரப்பு தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.

ராஜினாமா

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கை, சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு மாற்றியது.சுபன்விதா எஸ்.பி., தலைமையில் நேற்று முதல் விசாரணை துவங்கியது. அதிகாரிகள் குழு, சின்னசாமி மைதானத்திற்கு சென்று கூட்ட நெரிசல் ஏற்பட்ட நுழைவாயில் பகுதியில் ஆய்வு செய்தனர்.இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி., அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிகில் சோசலே, டி.என்.ஏ., நிறுவனத்தின் துணை தலைவர் சுனில் மேத்யு, ஊழியர்கள் கிரண், சுமந்த் ஆகியோர் சிறையில் உள்ளனர்.அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும், சி.ஐ.டி., அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

ராஜினாமா

கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் செயலர் சங்கர், பொருளாளர் ஜெயராம் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, தலைவர் ரகுராம் பட்டிற்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், 'கடந்த இரண்டு நாட்களில் நடந்த எதிர்பாராத, துரதிர்ஷ்டவசமான சம்பவங்களில் எங்கள் பங்கு குறைவாக இருந்தாலும், தார்மீக பொறுப்பு ஏற்று பதவியை ராஜினாமா செய்கிறோம்' என, குறிப்பிட்டுள்ளனர்.

'நியாயம் இல்லை'

பெங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த தயானந்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சங்கம், இச்சம்பவத்தில் அவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியும், முன்னாள் கவர்னருமான கிரண் பேடி நேற்று அளித்த பேட்டி:சஸ்பெண்ட் செய்யப்பட்ட தயானந்தா தனிமையில் பணியாற்றவில்லை. அரசு, காவல் துறை உட்பட அனைவரின் ஒத்துழைப்புடன் பணியாற்றி உள்ளார். இதில் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தின் ஈடுபாடு உள்ளது. பிரச்னைக்கான உண்மை காரணத்தை கண்டறியாமல், அவரை சஸ்பெண்ட் செய்ததில் பகுத்தறிவும் இல்லை; நியாயமும் இல்லை. சம்பவத்தன்று உண்மையில் என்ன நடந்தது என்பதை, நாம் அவரிடம் கேட்டிருக்க வேண்டும். கருத்துகளை கூற அவருக்கு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். எந்த விளக்கமும் கேட்காமல், அவரை பலிகடா ஆக்கியிருப்பது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Padmasridharan
ஜூன் 08, 2025 08:46

மொழிப்பற்று காமிக்கறதவிட மனுஷங்க உயிர் மேல் அதிக பற்று இருக்கணும் எல்லார்க்கும். இவங்களுக்கு மத்தவங்க கிட்ட மன்னிப்ப எதிர்பாக்கிற மாதிரி மனுஷங்க உயிருக்கு பணத்தை கொடுத்து முடிச்சிட்டாங்க.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 08, 2025 06:17

இன்டி கூட்டணியின் மூன்று கருநாடக தலைவர்கள் இன்னமும் வெளியில் சுத்துவது தான் அந்த கூட்டணியின் வெட்கக்கேடு


முக்கிய வீடியோ