உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயரப் பறக்குது வெங்காயம்; விலையை கேட்டாலே கண்ணீர் வரும்!

உயரப் பறக்குது வெங்காயம்; விலையை கேட்டாலே கண்ணீர் வரும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.விலை உயர்வு குறித்து டில்லி காய்கறி விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், வெங்காய விலை கிலோவுக்கு ரூ.60லிருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது என்றார்.மும்பை வியாபாரி கூறுகையில், பணவீக்கத்தால், வெங்காய விலையும் கூடிவிட்டது. கிலோவுக்கு, 60 ரூபாயிலிருந்து ரூ.75 ஆக விலை உயர்ந்துள்ளது. ஆனால், மற்ற காய்கறிகள் விலை நிலையாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் வாங்கிச்செல்கிறார்கள் என்றார்.டில்லியில் இல்லத்தரசி ஒருவர் கூறுகையில், வெங்காயம் உணவில் சேர்த்து பழக்கமாகி விட்டதால் நாங்கள் வாங்க வேண்டியது கட்டாயமாகிறது. நான் ஒரு கிலோ ரூ.70 க்கு வாங்கினேன். விலை அதிகமாக இருக்கிறது என்றார்.மும்பையில் வாடிக்கையாக வாங்கும் டாக்டர் ஒருவர் கூறுகையில், வெங்காயத்தோடு பூண்டு விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கும். நான் 5 கிலோ வெங்காயம் ரூ.360க்கு வாங்கி உள்ளேன்.காய்கறிகள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.நாடு முழுவதும் வெங்காய விலை உயர்வால் மற்ற காய்கறி விலையும் கூடியிருப்பதாக, வியாபாரிகள் கூறுகின்றனர்.

வரத்து குறைவால் தமிழகத்தில் விலை உயர்வு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் குறைந்தபட்ச விலை 40 ரூபாய் ஆகவும் அதிகபட்ச விலை 75 ரூபாய் ஆகும் உள்ளது குறிப்பிடத்தக்கது.கோயம்பேடு சந்தையில் காய்கறி விலைகள்(1 கிலோ)தக்காளி ரூ.23 லிருந்து ரூ.30 ஆகவும்உருளைகிழங்கு ரூ.28 லிருந்து ரூ.52பெரிய வெங்காயம் ரூ.40 லிருந்து ரூ.75 கத்தரிக்காய் ரூ.10 லிருந்து ரூ.25 முட்டைகோஸ் ரூ.15 லிருந்து ரூ.20 பீன்ஸ் ரூ.30 லிருந்து ரூ.40 அவரைக்காய் ரூ.25 லிருந்து ரூ.45 கேரட் ரூ.50 லிருந்து ரூ.60முள்ளங்கி ரூ.20 லிருந்து ரூ.25 வெண்டைக்காய் ரூ.10 லிருந்து ரூ.25 முருங்கை ரூ.10 லிருந்து ரூ.40 பீட்ரூட் ரூ.30 லிருந்து ரூ.50சின்ன வெங்காயம் ரூ.30 லிருந்து ரூ.70 ஆகவும்காலிபிளவர் ரூ.15 லிருந்து ரூ.20 ஆகவும்தேங்காய் ரூ.25 லிருந்து ரூ.35 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சந்திரசேகர்
நவ 10, 2024 09:59

நல்ல தரமான உணவு பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து விட்டு மூன்றாம் தரமான உணவு பொருட்களை அதிக விலைக்கு நம் நாட்டில் விற்று லாபம் சம்பாதிக்கலாம்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 10, 2024 07:26

விலை உயர்வால் பயனடைய போவது விவசாயிகள் தானே. நல்லது தானே ஏன் வருத்தப்பட வேண்டும். விலை குறைந்தால் விலை கட்டுப்படியாகவில்லை என்று தக்காளியை வீதியில் வீசிச் செல்வதும் விவசாயிகள் தான். இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


சாண்டில்யன்
நவ 09, 2024 21:23

இந்த காலத்தில் வெங்காயத்தை கண்ணில் பிழிந்தாலும் கண்ணீர் வராது ஏனென்றால் வெங்காயத்தில் சாறு வர வழியேயில்லை சுக்காய் காய்ந்த வெங்காயமே மார்க்கெட்டில் காணலாம்


raja
நவ 09, 2024 20:09

அப்புறம் என்ன தமிழா.. திருட்டு ஒன்கொள் கோவால் புற திராவிடன் மாடல் ஆட்சியில் விடியல் கிடைத்து விட்டது என்று ஸ்வீட் எடு ...கொண்டாடு...


வைகுண்டேஸ்வரன்
நவ 09, 2024 22:02

டில்லி, மும்பையில் வெங்காயம் விலை ஏறியதற்கு தமிழன் ஏன் ஸ்வீட் எடுத்து கொண்டாட வேண்டும்?


raja
நவ 10, 2024 15:20

என்ன கொத்தடிமை உள்ளே இருந்து கருத்து எழுதுது போல .. தமிழ் நாட்டு நடப்பு எதுவுமே தெரியலையே...


Gopal
நவ 09, 2024 19:04

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 150 ,200 க்கு உயரும் இது புதிதல்ல.புயல் வந்தால் இன்னும் கூடும்


Bala
நவ 09, 2024 17:40

பூண்டு விலையேறி விட்டது.சிறிது நாட்கள் இவைகள் இல்லாமல் பழகி கொள்ளலாம்


Smba
நவ 09, 2024 16:52

ஒவ்வொரு விவசாயும் தண் தேவைக்கு மட்டுமே பயிரிடனும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை