உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் குளத்தை தோண்டிய போது ஹிந்து கடவுள் சிலைகள் கண்டெடுப்பு

காஷ்மீரில் குளத்தை தோண்டிய போது ஹிந்து கடவுள் சிலைகள் கண்டெடுப்பு

அனந்த்நாக் : ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, அங்கு புதைந்து கிடந்த 15 ஹிந்து கடவுள் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சாலியா பகுதியில் உள்ள குளத்தை புதுப்பிக்கும் பணியில், பொதுப்பணித்துறையினர் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். அப்போது ஒரு இடத்தை தோண்டியபோது, 11 சிவலிங்கங்கள் உட்பட 15 ஹிந்து கடவுள் சிலைகள் புதைந்து கிடப்பதை கண்டுபிடித்தனர். மேலும் உடைந்த நிலையில் சில சிலைகள் மீட்கப்பட்டன. இந்த சிலைகள் 2,000க்கும் மேற்பட்ட ஆண்டு பழமையானவை என தெரியவந்துள்ளது. சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடம் காஷ்மீரை ஆண்ட கார்கோடா வம்சத்தினர் மற்றும் காஷ்மீர் பண்டிட்களுக்கு தொடர்புடையது. சிலைகளை மீட்ட பொதுப்பணித் துறையினர், இது குறித்து ஜம்மு- - காஷ்மீர் காப்பகங்கள், தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சிலைகள் மற்றும் தோண்டப்பட்ட இடத்தை அவர்கள் பார்வையிட்டனர். மேலும் சிலைகளின் சரியான வயதை அறியும் சோதனைக்காக ஸ்ரீநகருக்கு அனுப்பப்படும் என தெரிவித்தனர். இந்த இடத்தில் முன்பு கோவில் இருந்திருக்கலாம் அல்லது சிலைகளை பாதுகாக்க இந்த இடத்தில் புதைத்து வைத்திருக்கலாம். எனவே இந்த இடத்தில் புதிய கோவில் கட்டப்பட்டு இந்த சிலைகளை தரிசனத்துக்கு வைக்க வேண்டும் என, காஷ்மீரி பண்டிட்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சிந்தனை
ஆக 04, 2025 14:15

என்னதான் கிடைத்து என்ன செய்ய ஒரு காலத்தில் ஹிந்துக்களின் நாடு இப்போ .... நாடாக ஆகிவிட்டது


V RAMASWAMY
ஆக 04, 2025 10:18

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகால அகண்ட சனாதன பரதமாக இருந்த பரந்து விரிந்த பாரத சாம்ராஜ்யம் அடாவடித்தனமான அக்கிரமக்காரர்களால் வஞ்சனை முறையில் கொள்ளையடிக்கப்பட்டு சில நூற்றாண்டுகளுக்கு முன் முளைத்த ஒரு சில பிற மதக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பலப்பல பெயர்களால் இப்பொழுது ஏதோ அவர்கள் தான் அந்தந்த தேசத்திற்கு சொந்தக்காரர்கள் போல் தெரியப்படுத்தப்பட்டன என்பது புரிகிறது .


Rajarajan
ஆக 04, 2025 09:15

வரலாற்று ரீதியில் பார்த்தால், இந்தியாவில் படையெடுப்பின் மூலம் இஸ்லாம் திணிக்கப்பட்டது என்பது உண்மை. அதேபோல, வணிக ரீதியில் கிறிஸ்துவம் இந்தியாவில் நுழைந்து, திணிக்கப்பட்டது என்பது உண்மை. பிராமணர்கள் என்ற பிரிவினர், இந்தியாவில் சரஸ்வதி நதி பாய்ந்த பூர்வீக நிலப்பகுதியை அடிப்படையாக கொண்டவர்கள். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. எனவே, பிராமணர் வந்தேறிகள் அல்ல. மேற்கண்ட இரு பிரிவினர் தான் வந்தேறிகள் என்பதே நிதர்சனம்.


K V Ramadoss
ஆக 04, 2025 07:44

என்ன குழப்புகிறார் ?


raja
ஆக 04, 2025 06:34

இதில் இருந்து அங்கு வாழ்ந்து வந்தவர்கள் யார் வந்தேறிகள் யார் என்று தமிழனுக்கு புரிந்தால் சரி....


Barakat Ali
ஆக 04, 2025 06:00

ஆதி மதம் சனாதனமாக இருக்கலாம் .... ஆனால் பேரம் செய்தால் - தேர்வில் வெற்றி பெறணும் .... அப்பத்தான் தேங்காய் உடைப்பேன் - இறைவன் அருள் புரிவதில்லை ....... உருவ வழிபாடு என்னும் ஹராம் .... ஆகவே தவறான நாடாகிய பாக் கில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்படுவதில் வியப்பில்லை .....


s
ஆக 04, 2025 02:40

"இந்த சிலைகள் 2,000க்கும் மேற்பட்ட ஆண்டு பழமையானவை என தெரியவந்துள்ளது"" அல்ல "இந்த சிலைகள் 2,000க்கும் ஆண்டு மேற்பட்ட பழமையானவை என தெரியவந்துள்ளது"


raja
ஆக 04, 2025 06:31

இந்த சிலைகள் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை என்பதே சரி...


Anand
ஆக 04, 2025 11:00

இரண்டும் ஒன்றுதான், விடுங்கள் சாமிகளா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை