உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்துஜா குழுமத்தின் இரு வாகனங்கள் அறிமுகம்

ஹிந்துஜா குழுமத்தின் இரு வாகனங்கள் அறிமுகம்

புதுடில்லி,:ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த, 'அசோக் லேலண்ட்' மற்றும் அதன் துணை நிறுவனமான, 'ஸ்வீட்ச் மொபிலிட்டி' ஆகிய இரு நிறுவனங்களும், ஐந்து வாகனங்களை காட்சிப்படுத்தி, இரு வாகனங்களை அறிமுகப்படுத்தின. இதில், அசோக் லேலண்ட் நிறுவனம், 'சாத்தி' என்ற இலகு ரக சரக்கு வாகனத்தையும், ஸ்வீட்ச் மொபிலிட்டி நிறுவனம், 'ஐ.இ.வி., - 8' நடு ரக மின்சார சரக்கு வாகனத்தையும் அறிமுகப்படுத்தியது.பொதுவாக, டீசல் இன்ஜின் வாகனங்களில், நைட்ரஸ் ஆக்ஸைடு உமில்வை குறைக்க, 'கேட்டலிஸ்டிக் கன்வர்டர்' என்ற அமைப்பு பயன்படுத்தப்படும். அதற்கு பதிலாக, பராமரிப்பை எளிதாக்கும் வகையில், 'எல்.எல்.டி.,' என்ற நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதில், 3 சிலிண்டர், டீசல் இன்ஜின் வழங்கப் பட்டுள்ளது. இது, 1,120 கிலோ எடை வரை ஏந்தி, பயணிக்க முடியும். இந்த வாகனத்துக்கு, ஐந்து ஆண்டு அல்லது 2 லட்சம் கி.மீ., வரை உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை, 6.50 லட்சம் ரூபாய்.

'ஐ.இ.வி., - 8'

இந்த வாகனத்தின் ரேஞ்ச், குறைந்தபட்சம், 250 கி.மீ., வரை செல்லும். இதன் பேட்டரி ஆற்றல் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதிகபட்சம், நான்கு டன் எடை வரை இந்த வாகனம் ஏந்திச் செல்லும். இதில், 'எலக்ட்ரோ ஹைட்ராலிக்' ஸ்டீயரிங், ஏ.சி., கேபின், ரிக்லைன் மற்றும் ஸ்லைடிங் சீட்டுகள் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. இதன் விலை குறித்து எந்த தகவலும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !