உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விரைவில் மேட் இன் இந்தியா விமானம்; ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தகவல்

விரைவில் மேட் இன் இந்தியா விமானம்; ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தகவல்

புதுடில்லி: நம் நாட்டின், 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' நிறுவனம், பயணியர் விமானத்தை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்காக ரஷ்யாவின், 'யுனைடெட்' விமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 'சுயசார்பு இந்தியா' திட்டத்தின் மூலம் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய அரசின், எச்.ஏ.எல்., எனப்படும், 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' நிறுவனம் உள்நாட்டிலேயே பயணியர் விமானம் தயாரிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தற்போது இந்நிறுவனம் ராணுவத்துக்கு தேவையான, 'தேஜஸ்' இலகு ரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ரேடார்கள் ஆகியவற்றை தயாரித்து வழங்கி வருகிறது. முதல் முறையாக பயணியர் விமானத்தை முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்க உள்ளது.இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: ரஷ்யாவின், 'யுனைடெட்' விமான நிறுவனத்துடன் இணைந்து, எஸ்.ஜெ., - 100 வகை பயணியர் விமானங்கள் தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம், நம் நாட்டில் முதன் முறையாக பயணியர் விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த விமானம் குறுகிய துார விமான சேவைகளில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும். சிறு நகரங்களை இணைக்கும், 'உதான்' விமான திட்டத்தில் முக்கிய பங்காற்றும். அடுத்த, 10 ஆண்டுகளில் குறுகிய துார விமானங்கள், 200க்கும் மேல் தேவைப்படும். விமான போக்குவரத்து துறையில், 'சுய சார்பு இந்தியா' கனவை நனவாக்கும் ஒரு முக்கியப்படியாக எஸ்.ஜெ., 100 விமானம் அமையும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்!

* 103 பயணியர் இருக்கை உடையது. * 3,530 கி.மீ.,வரை பறக்கும் திறன். * கடும் குளிர் மற்றும் அதிக வெப்பத்திலும் பறக்கும். * குறைந்த செயல்பாட்டு செலவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Tetra
அக் 29, 2025 22:08

சிரிப்புதான் வருகிறது


Nagarajan
அக் 29, 2025 12:22

உள்ளூரில் தயாரித்து என்ன பயன் சொந்தமா விமானம் இல்லை இனி விமான நிலையமும் இல்லாம போகப்போகுது


Kasimani Baskaran
அக் 29, 2025 05:45

நல்ல முயற்சி... தீவிரமாக உழைக்க வேண்டும்.


Marirajan Krishnan
அக் 29, 2025 03:52

The Indian government should prioritize the repair and maintenance of existing airlines, including private carriers. In recent times, safety standards appear to have declined, raising serious concerns. It is essential that all aircraft adhere strictly to regulatory compliance and safety protocols.


Kasimani Baskaran
அக் 29, 2025 05:43

இந்திய அரசு, தனியார் சேவையாளர்களையும் உட்பட, தற்போது இயங்கும் விமான நிறுவனங்களின் பழுது சரிசெய்தல் மற்றும் பராமரிப்பை முன்னுரிமைப்படுத்த வேண்டும். சமீப காலங்களில் பாதுகாப்புத் தரநிலைகள் குறைந்துள்ளன போலத் தெரிகிறது இது கடுமையான கவலைகளை எழுப்புகிறது. அனைத்து விமானங்களும் ஒழுங்குமுறை விதிமுறைகளையும் பாதுகாப்பு நடைமுறைகளையும் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பது அவசியம்.


Thravisham
அக் 29, 2025 03:27

முதல்ல HALல இருக்கும் பழைய பெருச்சாளிகளை தூக்குங்க. இள ரத்தத்தை பாய்ச்சுங்க.


முக்கிய வீடியோ