உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீட்டுக்கே சென்று சிகிச்சை; கர்நாடகாவில் புதிய திட்டம்

வீட்டுக்கே சென்று சிகிச்சை; கர்நாடகாவில் புதிய திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களால் அவதிப்படும் நோயாளிகளுக்கு, வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்க, கர்நாடக சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

புற்றுநோய் உட்பட கடுமையான நோயால் அவதிப்படும் ஏழைகள், மூத்த குடிமக்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறை திட்டம் வகுத்துள்ளது. இதற்காக அவர்களின் வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக பெங்களூரு சி.வி.ராமன் நகர் பொது மருத்துவமனையில் இத்தகைய வசதி செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. 'பைலட்' திட்டத்தின் கீழ், நோயாளிகளின் வீடுகளுக்கே டாக்டர்கள் சென்று இலவச சிகிச்சை அளிப்பர். மூத்த குடிமக்கள், புற்றுநோயாளிகள், இதய நோய், மூளை பாதிப்பு உட்பட கடும் நோய்களால் அவதிப்படுவோருக்கு இச்சலுகை கிடைக்கும். இவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.இத்தகைய நோயாளிகள், அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும்போது நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இவர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்படலாம். இதை கருத்தில் வைத்தே, 'பைலட்' திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. மொபைல் மருத்துவமனை போன்று நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கப்படும்.முதற்கட்டமாக சி.வி.ராமன் நகர் பொது மருத்துவமனையில் இருந்து, ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இலவச சிகிச்சை கிடைக்கும். வரும் நாட்களில் மற்ற இடங்களுக்கும் திட்டம் விஸ்தரிக்கப்படும். ஏழை மக்களுக்கு திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

S Ramkumar
ஜூன் 10, 2025 12:16

நீங்கள் இலவசமாக பார்க்க வேண்டாம். டாக்டர்களை வயதானவர்களுக்கு வீட்டுக்கு வந்து வைத்தியம் பார்க்க சொல்லுங்கள். குறைந்த பட்சம் மரண படுக்கையில் இருப்பவர்களுக்கவாவது டாக்டர்கள் வரவேண்டும். மருத்துவர்கள் உறுதி மொழி பட்டியலிலும் இது இடம் பெறவேண்டும்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 10, 2025 06:29

இருக்கும் மனிதவளம் மருத்துவர் செவிலியர் ஊர்தி ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் அவதி பட்டுக்கொண்டிருக்கும்போது மற்றுமொரு அரசியல் நாடகத்தை கர்நாடக காங்கிரஸ் அரசு செய்து கொண்டிருப்பது வேதனை இண்டி கூட்டணிக்கு ஓட்டளித்த அரசு அதிகாரிகளுக்கு மற்றுமொரு பாடம்


Kasimani Baskaran
ஜூன் 10, 2025 04:02

இருக்கும் மனிதவளத்தை வைத்துக்கொண்டு இதெல்லாம் சாத்தியம் இல்லை. படம் காட்டலாம் - தொடர் சேவை வழங்குவது சாத்தியமில்லை.


தாமரை மலர்கிறது
ஜூன் 10, 2025 01:23

இதெல்லாம் இந்தியாவில் சாத்தியப்படாத முறைகள். காங்கிரஸ் அரசு வெறுமனே இரண்டு பேருக்கு கேமரா முன் சிகிச்சை அளித்துவிட்டு ஏதோ ஒரு லட்சம் பேருக்கு சிகிச்சை அளித்தது மாதிரி டிவியில் ஜிகினா காட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை