உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீட்டை உடைத்து 25 பவுன் நகை ரூ.4 லட்சம் திருட்டு

வீட்டை உடைத்து 25 பவுன் நகை ரூ.4 லட்சம் திருட்டு

மூணாறு:மூணாறு அருகே கூடாரவிளை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் வசிக்கும் ராஜகுமாரி, அதே பகுதியில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கணவர் தமிழகத்தில் வேலை செய்கிறார். கடந்த வார விடுமுறையில் ராஜகுமாரி வீட்டை பூட்டிவிட்டு மூணாறு அருகே வாகுவாரை எஸ்டேட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்து திரும்பிபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள், கார் வாங்குவதற்கு வைத்திருந்த ரூ.4 லட்சம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி