உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பலத்த மழைக்கு இடிந்த வீடு: இடிபாடுகளில் சிக்கியவர் மீட்பு

பலத்த மழைக்கு இடிந்த வீடு: இடிபாடுகளில் சிக்கியவர் மீட்பு

கொப்பால்: கங்காவதியில் தொடர்ந்து பெய்த மழையால் ஒரு வீடு இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி புதைந்த நபரை, கிராமத்தினர் மீட்டனர்.கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில், கனமழை பெய்து வருகிறது. கொப்பால் மாவட்டம், கங்காவதியின் தானாபூர் கிராமத்தில் நேற்று காலை திடீரென வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.சத்தத்தை கேட்டு வெளியே வந்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இடிந்த வீட்டில் வசித்து வந்த பிரகாஷ் இடிபாடுகளில் சிக்கியிருந்தார்.குடும்பத்தினர் மற்றொரு அறையில் இருந்ததால், உயிர் தப்பினர். கணவரை மீட்கக் கோரி, அவரது மனைவி, உதவி கோரி அலறினார்.தீயணைப்பு படையினர் வருவதற்குள், கிராமத்தினரே, பிரகாஷ் மீது விழுந்திருந்த மண்ணை அகற்றினர்.அவர், மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இடிபாடுகளில் சிக்கிய பிரகாஷை கிராமத்தினர் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை