உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகள் 5 பேர் வீடு இடித்து தரைமட்டம்; காஷ்மீரில் ராணுவத்தினர் அதிரடி

பயங்கரவாதிகள் 5 பேர் வீடு இடித்து தரைமட்டம்; காஷ்மீரில் ராணுவத்தினர் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு கமாண்டர் உட்பட 5 பேரின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cd2615au&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 22ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில், பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக, சந்தேகப்படும் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர்.இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் லஷ்கர்-இ-தொய்பா மூத்த தளபதி உட்பட 5 பேரின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தள்ளினர். அந்த வகையில், ஷோபியனின் சோட்டிபோரா கிராமத்தில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு கமாண்டர் ஷாஹித் வீடு இடிக்கப்பட்டன. இவர் 4 ஆண்டுகளாக பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குல்காமில் மற்றொரு தீவிர பயங்கரவாதி வீடு இடிக்கப்பட்டது. ஏற்கனவே, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அடில் ஹுசேன் தோகர் மற்றும் ஆசிப் ஷேக் ஆகியோர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்களில், தோகர், அனந்த்நாக் மாவட்டம்; ஷேக், புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

பேசும் தமிழன்
ஏப் 26, 2025 17:50

தமிழ்நாட்டிலும் ஏராளமான தேச விரோதிகள் இருக்கிறார்கள்..... அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


PalaniKuppuswamy
ஏப் 26, 2025 16:04

போதாது .. சொத்துக்களை அரசுடமை ஆக்குங்கள் . குடியுரிமை ரத்து செய்து பாகிஸ்தான் அனுப்புங்கள் . அல்லது தனி கேம்ப் சிறையில் வையுங்கள் . போர் ஏற்பட்டால் கேடயமாக உபயோக படுத்தலாம் .தேச துரோகிகளுக்கு நாட்டில் இடம் இல்லாமல் ஆகுங்கள்


Karthik
ஏப் 26, 2025 15:00

வீடானாலும் சரி காட்டுமிராண்டியானாலும் சரி,. சந்தேகம் வந்தாலே போட்டுத்தள்ளுங்கள் வீரர்களே. மேலும் ஊடகங்கள் இதுபோன்ற மிருகங்களை மரியாதையுடன் குறிப்பிட்டு தங்கள் மரியாதையை குறைத்துக்கொள்ள வேண்டாமே சிந்திக்குமா??


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
ஏப் 26, 2025 14:11

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பிடித்துக் கொண்டுவந்து செங்கோட்டை திடலில் மக்கள் வெள்ளத்தின் நடுவே தூக்கில் போட வேண்டும். செய்யுமா இந்திய அரசு.


Mettai* Tamil
ஏப் 26, 2025 13:21

மிகச் சரியான செயல் ...


Kumar Kumzi
ஏப் 26, 2025 13:21

நாட்டின் கூலிபான் டலீவன் ஓங்கோல் துண்டு சீட்டு கொஞ்சம் கவனிங்க சார்


ராமகிருஷ்ணன்
ஏப் 26, 2025 13:18

கொலைகார பயங்கரவாதிகளை ஆதரிப்பதாக தமிழகத்தில் ஒரு சிலர் உள்ளனர். அவர்களின் வீடுகளையும் இடிக்கனும்


சுந்தர்
ஏப் 26, 2025 13:18

ஐயையோ.. இப்படியெல்லாம் இடிக்கக் கூடாது. அது மனித உரிமை மீறல்ன்னு, உ.பி.யில் இந்த மிருகங்களுக்கு ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.


RK
ஏப் 26, 2025 13:09

தீவிரவாத செயல்களில் ஈடுபடும் உள்ளூர் தீவிரவாதிகளின் வீடுகளை தரைமட்டமாக்குவதுதான் நல்லது. யோகி விரைவில் பிரதம மந்திரியாக வரவேண்டும்.


thehindu
ஏப் 26, 2025 13:04

இந்து மதவாத அரசு மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டிக்கொள்ள ராணுவத்தை துஸ்பிரயோகம் செய்து ஆடும் ஆட்டம் இது


ராமகிருஷ்ணன்
ஏப் 26, 2025 14:06

உன் வீடு எங்குள்ளது. புல்டோசர் ட்ரீட்மென்ட் தான் உனக்கு சரியா வரும்


N Sasikumar Yadhav
ஏப் 26, 2025 19:28

இந்து என உறுதிபடுத்தி கொண்டு சுட்டு சாகடித்தாரகளே உங்க டொப்பிள் கொடி உஒறவான பாகிஸ்தானிய இசுலாமிய பயங்கரவாத கும்பலுங்க அப்ப எங்கே போய்விட்டது உங்க மானங்கெட்ட மதவெRY


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை