தமிழகத்தில் எப்படி
டில்லியில், காற்று தரக் குறியீடு, 484 என்ற அபாய அளவில் உள்ள நிலையில், தமிழகத்தின் ராமநாதபுரத்தில், இது, வெறும் 19 என்ற அளவில் உள்ளது. காற்று மாசு மிக மிக குறைவாக, சுவாசிக்க கூடிய தரமான காற்று இங்கு கிடைப்பதை, இந்த அளவு குறிக்கிறது.
தமிழகத்தில் எப்படி?
இதேபோல் நாடு முழுதும், 26 நகரங்களில், சுவாசிக்கக் கூடிய நல்ல தரமான காற்று கிடைப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில், எந்த ஒரு வட மாநில நகரமும் இல்லை. வடகிழக்கு மாநிலமான மிஜோரமின் அய்ஸ்வால் இதில் இடம்பெற்றது. மற்றவை அனைத்தும் தென் மாநிலங்களைச் சேர்ந்தவை. தமிழகத்தில் அரியலுார், கோவை, திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர் இதில் இடம்பெற்றுள்ளன.அதுபோல, காற்றின் தரம் திருப்திகரமாக உள்ளவையாக 51 சிறிய மற்றும் பெரிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் தமிழகத்தில் ராணிப்பேட்டை, திருப்பூர், வேலுாருடன், புதுச்சேரியும் இடம்பெற்றுள்ளன.