உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் எவ்வளவு காலம் தான் சிறைவாசம்? உச்ச நீதிமன்றம் கேள்வி

பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் எவ்வளவு காலம் தான் சிறைவாசம்? உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடில்லி :மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, கைது செய்யப்பட்ட அம்மாநில முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை, எவ்வளவு காலம் சிறையில் அடைக்க முடியும்? என, அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி, 73, முந்தைய திரிணமுல் காங்., ஆட்சியில் கல்வி அமைச்சராக பதவி வகித்த போது, அரசு நிதியுதவி மற்றும் உதவி பெறும் துவக்கப் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத நியமனங்களில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

ஜாமின் கூடாது

இதில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் குறித்து வழக்கு பதிந்த அமலாக்கத் துறையினர், 2022 ஜூலை 23ல், கோல்கட்டாவில் பார்த்தா சாட்டர்ஜியை கைது செய்தனர்.இதையடுத்து, அமைச்சர் மற்றும் கட்சி பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இரு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பார்த்தா சாட்டர்ஜி, ஜாமின் கோரி கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த ஏப்., 30ல் விசாரித்த உயர் நீதிமன்றம், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.பார்த்தா சாட்டர்ஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதாடுகையில், ''இரு ஆண்டுகளுக்கும் மேல் சாட்டர்ஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இன்னும் விசாரணையே துவங்கப்படவில்லை. ''மேலும், 183 சாட்சிகள், நான்கு துணை புகார்கள் இருப்பதால், வழக்கு விசாரணை விரைவில் முடிய வாய்ப்பில்லை. உடல்நலக் குறைவால் சாட்டர்ஜி சிறையில் அவதிப்படுகிறார். ''பண மோசடி வழக்கில், அதிகபட்ச தண்டனை காலம் ஏழு ஆண்டுகள். இதில் மூன்றில் ஒரு பங்கை, ஏற்கனவே சிறையில் சாட்டர்ஜி அனுபவித்து விட்டார்,'' என்றார்.அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு கூறுகையில், ''பார்த்தா சாட்டர்ஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது. அவர் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளார். ஜாமின் வழங்கினால், வழக்கின் சாட்சியங்களை அவர் அழிக்கக்கூடும்,'' என்றார்.

ஒத்திவைப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இரு ஆண்டுகளுக்கும் மேலாக பார்த்தா சாட்டர்ஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த வழக்கில் இன்னும் விசாரணையே துவங்கவில்லை. இந்த வழக்கை பொறுத்தவரை, 183 சாட்சிகள் உள்ளனர். வழக்கு விசாரணைக்கு நீண்ட காலம் எடுக்கும். எவ்வளவு காலம் பார்த்தா சாட்டர்ஜியை சிறையில் அடைக்க முடியும் என்பது தான் கேள்வி.இரு ஆண்டுகளுக்கும் மேல் எந்தவொரு விசாரணையும் நடக்காமல் வழக்கு உள்ளது. அப்படிப்பட்ட வழக்கில் சமநிலையை எவ்வாறு அடைவது?பார்த்தா சாட்டர்ஜி மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்பதை புறக்கணிக்க முடியாது. விசாரணை முடிவில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்? 2 - 3 ஆண்டுகள் காத்திருப்பு என்பது சிறிய காலம் அல்ல. அமலாக்கத் துறையின் சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்குகளில் தண்டனை விகிதம் என்ன? 60 - 70 சதவீதம் என்றால் கூட நாங்கள் புரிந்து கொள்வோம். ஆனால், இந்த வழக்குகளில் தண்டனை விகிதம் படுமோசம்.இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில், பார்த்தா சாட்டர்ஜி மீது சி.பி.ஐ., பதிந்துள்ள வழக்கு விபரங்களை தாக்கல் செய்யும்படி முகுல் ரோஹத்கியிடம் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிச., 2க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

S.Martin Manoj
நவ 28, 2024 21:05

அமலாக்கத்துறை என்றால் ஆளும் கட்சிக்கு கூஜா தூக்கும் துறை


Uuu
நவ 28, 2024 11:27

லைப் சென்டென்ஸ் ஓர் death


ஆரூர் ரங்
நவ 28, 2024 11:01

அமலாக்கத்துறைக்கு தினமும் நூறு புகார்கள் வருகின்றன. எத்தனையை சமாளிக்குறது? நீதித்துறையும் ஜாமீன் கொடுக்கறதுல பிஸி. தேடப்படும் குற்றவாளிகளை ஒளித்து வைக்கும் டுமீல் காவல்துறை வேறு.


sankar
நவ 28, 2024 09:48

அன்புள்ள அமித்சா அவர்களே - அமலாக்கத்துறையை மூடிக்கிட்டு வழக்குகளை சீக்கிரம் பைசல் செய்து இந்த வசூல் ராசாக்களை உள்ளே அனுப்புங்கள்


GMM
நவ 28, 2024 08:29

மம்தா ஆட்சியில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு. சட்ட விரோத பண பரிவர்த்தனை. கட்சி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம். குற்ற தடயம் இருந்தால் தான் நீக்க முடியும். இரு ஆண்டுகளுக்கு மேல் சிறை. காரணம் மாநில நிர்வாகம் ஒத்துழைப்பில் தான் குற்றம் நிரூபிக்க முடியும். இது கடினம். மாநில நிர்வாகத்தை முடக்கி, விசாரணை துவங்கி விரைவில் முடிக்க முடியும். அல்லது அரசியல் குற்ற காலங்களில் மாநில நிர்வாகம் கவர்னர் கீழ் இருக்க வேண்டும். அல்லது மாநில கட்சி தானே ராஜினாமா செய்ய வேண்டும். நீதிமன்றம் போல் மத்திய விசாரணை அமைப்புகள் தேச நிலம் கருதி சேவை செய்யும். தேவையற்ற கட்டுப்பாடுகள் மூலம், திக்கு தெரியாமல் மத்திய விசாரணை அமைப்புகள்.


Dharmavaan
நவ 28, 2024 07:40

ஏன் விசாரணை துவங்கவில்லை, விளக்கவில்லை.அமலாக்கத்துறை தூங்குகிறதா


Kasimani Baskaran
நவ 28, 2024 06:40

ஒரு லஞ்ச ஊழல் வழக்கைக்கூட மாநில அமைப்புகள் தன்னிச்சையாக விசாரித்து தண்டனை வாங்கிக்கொடுக்க முடியாத அவலம் பல மாநிலங்களில் நிகழ்ந்து இருக்கிறது. அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணையை நாசமாக்கி விடுவார்கள். குற்றம் நிகழ்ந்தது ஆவணப்படுத்தப்பட்டது இருந்தாலும் கூட நீதித்துறை கண்ணை மூடிக்கொள்வது செபா வழக்கு போன்ற பல வழக்குகளில் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது.


அப்பாவி
நவ 28, 2024 04:56

குற்றம் சாட்டப் பட்ட உடனேயே கைது செய்து ஜெயில்ல போடும்.கேவலம் இந்தியாவில் நடக்குது. அதானியை கோர்ட்டில் ஆஜராகச் சொன்னா இங்கே பொங்குறாங்க. இத்தனைக்கும் இங்கே லஞ்சம் குடுத்து அங்கே அவிங்களிடம் தவறான முறையில் முதலீடு வாங்கியிருக்காரு. அது தப்பே இல்லைன்னு இங்கே சாதிக்கறாங்க.


Dharmavaan
நவ 28, 2024 09:21

அப்போ லஞ்சம் வாங்கினவனும் உள்ளே போகணும் சரியா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை