உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவி முகத்தை எவ்வளவு நேரம் பார்ப்பீர்கள்? எல் அண்டு டி தலைவர் பேச்சால் சர்ச்சை

மனைவி முகத்தை எவ்வளவு நேரம் பார்ப்பீர்கள்? எல் அண்டு டி தலைவர் பேச்சால் சர்ச்சை

புதுடில்லி: “ஞாயிறு எதற்காக விடுமுறை? வீட்டில் மனைவியின் முகத்தை எவ்வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்?” என, எல் அண்டு டி., நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மகிழ்ச்சி

தனியார் நிறுவனமான லார்சன் அண்டு டூப்ரோ, நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் தொழில்துறையில், கடந்த 80 ஆண்டுகளாக முன்னணியில் இருந்து வருகிறது. இதன் தலைவராக எஸ்.என்.சுப்ரமணியன் உள்ளார். இந்நிறுவனத்தின் ஊழியர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், சுப்ரமணியன் பேசியதாவது:உங்களை, ஞாயிறு அன்றும் பணி செய்ய வைத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.காரணம், நான் ஞாயிறு அன்றும் பணியாற்றுகிறேன். உலகில், நாம் முதல் நிலையில் இருக்க வேண்டுமானால், வாரத்தில் 90 மணி நேரம் பணியாற்ற வேண்டும். வீட்டில் இருந்து என்ன செய்வீர்கள்? எவ்வளவு நேரம் தான் உங்கள் மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.இவரது இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இவரது பேச்சு, ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விட உற்பத்தித்திறனுக்கு முன்னுரிமை அளிக்கும் நச்சுவேலை கலாசாரத்தின் அறிகுறியாக இருப்பதாக, பலர் கருத்து தெரிவித்துஉள்ளனர். 'இது நவீன யுக அடிமைத்தனத்தை அரங்கேற்றும் முயற்சி' என, சிவசேனா உத்தவ் அணி எம்.பி., பிரியங்கா சதுர்வேதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கண்டனம்

சுப்ரமணியன் வாங்கும் சம்பளத்தையும், சாதாரண ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தையும் ஒப்பிட்டு, பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, எல் அண்டு டி., நிறுவனம் தரப்பில், 'தேச முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான பரந்த பார்வையில் சுப்ரமணியன் பேசியுள்ளார். ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அசாதாரண வெற்றிகளை பெறுவதற்கு, அசாதாரண முயற்சிகள் தேவை' என, விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி, 'வாரத்துக்கு, 70 மணி நேரம் பணியாற்ற வேண்டும்' என, தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், சுப்ரமணியனும் அதேபோன்ற கருத்தை எதிரொலித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Azar Mufeen
ஜன 12, 2025 00:15

ஏம்பா உனக்கு மகள் இருந்து நாளை அவள் கணவன் இந்த வேலை மட்டும்தான் முக்கியம் என்று மத்த "வேலையை"செய்யா விட்டால் உனது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்குமா?


சண்முகம்
ஜன 11, 2025 23:51

தன் மனைவியை மனதில் கொண்டு பேசியிருக்கிறார். பாவம்.


Mediagoons
ஜன 11, 2025 22:17

இவர் ஒரு மாபெரும் தலைவர். மாபெரும் நிறுவனத்தின் தலைவர். L&T ல் வேலை செய்பவர்கள் குறைவான நேரம்தான் வேலைசெயகிறார்கள். அணைத்து முன்னணி நிறுவனங்களும் பல கான்டராக்ட் தொழிலார்களை வைத்துக்கொண்டு கொத்தடிமை போல் நடத்துகின்றனர். மோடி அரசு அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு உள்ளார்கள்


J.Isaac
ஜன 11, 2025 17:18

போகும் போது எதையும் கொண்டு போக முடியாது. போகவும் விட மாட்டார்கள். நாலு பேருக்கு நன்மை செய்தால் நாடே போற்றும்.


puratchiyalan
ஜன 11, 2025 13:56

இவர்கள் எல்லாம் கார்பொரேட் ஓநாய்கள்.. மக்களின் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கும் அட்டைகள். எந்த ஒரு கார்பொரேட் கம்பெனியும், மக்கள் நலனுக்காகவும், நாடு நலனுக்காகவும் செயல்படுவதில்லை. என்னுடைய 20 வருட அனுபவத்தில் சொல்லுகிறேன்.


J.Isaac
ஜன 11, 2025 13:00

சுய நலத்தின் வெளிப்பாடு.போகும் போது எதுவும் வராது. விடவும் மாட்டார்கள். நாலு பேருக்கு நல்லது செய்தால் ஆண்டாண்டுகாலமாக நாடே புகழும்.


M SELVARAJ
ஜன 11, 2025 12:21

This is our typical South Indian slavery mentality


Sundar Venkat
ஜன 11, 2025 11:48

அலுவலகம் வந்தா உன்னோட தீஞ்ச மூஞ்சிய எவ்ளோ நேரம் பாக்க முடியும்னு அவங்க திருப்பிக் கேட்டா?


Rajarajan
ஜன 11, 2025 11:40

தப்பா நினைக்காதீங்க பாஸ், ஒரு உதாரணம் தான். இந்த கருத்தை ஆமோதிப்பவர்களுக்கு ஒரு மகள் இருந்து, அவர் கணவர் எப்போதும் அலுவலக பணியிலேயே மூழ்கி இருப்பதாகவும், குடும்ப உறவில் பற்றே இல்லை என, உங்கள் வீட்டிற்கே திரும்பி வந்தால், அபோது உங்கள் மனநிலை என்னவாக இருக்கும் ?? யாருக்கு பரிந்து பேசுவீர்கள் ?? பெற்ற பெண்ணின் நியாயமான உணர்ச்சிகளுக்காகவா ?? அல்லது அலுவலக இயந்திரமனிதனான உங்கள் மாப்பிள்ளைக்காகவா ?? ஒரு தந்தையாக / சாதாரண மனிதனாக பதில் சொல்லுங்கள் ப்ளீஸ்.


Rajarajan
ஜன 11, 2025 11:34

பாஸ், உங்களுக்கே மனசாட்சி இருக்கா ?? கல்யாணம் ஆன புதுசுல, ஒருத்தன் இப்படி வெறித்தனமா அலுவலகம் / வேலையே கதின்னு இருந்தா, அப்பறம் அவனுக்கு நிரந்தர சாப்பாடு திருவோடு தான். சுமார் 40 - 45 வயசுக்கு அப்பறம் னு சொல்லியிருந்தா, ஒருவேளை சரியா இருந்திருக்கும். போகிறபோக்கை பார்த்தா, கிராமத்துல சொல்ற மாதிரி, ......... அடிச்ச காளை தான் உங்க அலுவலகத்துல வேலைசெய்யனும் போல. அதுசரி, நீங்களும் / இதுக்கு வக்காலத்து வாங்கறவங்களும், திருமணம் ஆனா புதுசுல, இப்படி வெறித்தனமா உழைச்சிருந்தா, வாரிசுகள் உருவாகி இருக்குமா ?? அப்பறம் குடும்பநல நீதிமன்றத்தில் ஏன் வழக்குகள் குவியாது ??