உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதானி, அம்பானியிடம் எவ்வளவு நிதி வாங்கினீர்கள்: ராகுலுக்கு பிரதமர் கேள்வி

அதானி, அம்பானியிடம் எவ்வளவு நிதி வாங்கினீர்கள்: ராகுலுக்கு பிரதமர் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரீம் நகர்: '' தேர்தல் தேதி அறிவித்த உடன் அம்பானி, அதானியை விமர்சிப்பதை காங்கிரஸ் இளவரசர்( ராகுல்) நிறுத்திவிட்டார். அவர்களிடம் எவ்வளவு நிதி பெற்றீர்கள்'' என பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.தெலுங்கானாவின் கரீம் நகரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், நாடே முதன்மை என்ற நோக்கத்தில் பா.ஜ., பணியாற்றி வருகிறது. ஆனால், காங்கிரசும், பிஆர்எஸ் கட்சியும் குடும்பமே முக்கியம் என்ற கொள்கை அடிப்படையில் பணியாற்றுகின்றன. அக்கட்சிகளானது, குடும்பத்தினால், குடும்பத்தினருக்காக, குடும்பத்தினரே இயக்கும் கட்சியாக உள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை. அக்கட்சிகளை ஊழல், சமரச அரசியல் மற்றும் மோசமான நிர்வாகம் ஆகியன ஒன்று சேர்க்கிறது.குடும்பமே முக்கியம் என்ற கொள்கையால், முன்னாள் பிரதமர் நரசிம்மராவை காங்கிரஸ் அவமதித்தது. அவர் இறந்த பிறகும், அவரது உடலை காங்கிரஸ் அலுவலகத்திற்குள் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கவுரவப்படுத்தியது.ரபேல் விமானம் இந்தியாவிற்கு வந்தது முதல், காங்கிரஸ் இளவரசர், கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர் பற்றி பேசி வருகிறார். பிறகு அம்பானி அதானி என்றார். ஆனால், தேர்தல் தேதி அறிவித்த உடன், அம்பானி அதானியை விமர்சிப்பதை ராகுல் நிறுத்திவிட்டார். அவர்களிடம் எவ்வளவு நிதி வாங்கினீர்கள்? இருவரையும் விமர்சிப்பதை நிறுத்தியதற்கு என்ன ஒப்பந்தம் போட்டுள்ளீர்கள் என கேட்க விரும்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

சாமி தரிசனம்

இதனிடையே, தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரம் செய்ய கரீம் நகர் வந்த பிரதமர் மோடி, அங்குள்ள ஸ்ரீராஜ ராஜேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.

விளையாட்டிலும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை

மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், ''மதத்தின் அடிப்படையில் யார் கிரிக்கெட் அணிக்குள் இருக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் தீர்மானிக்கும். விளையாட்டிலும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே காங்கிரசின் எண்ணம்'' எனப்பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

skv srinivasankrishnaveni
மே 09, 2024 06:42

ராகுல் அண்ட் பிரியங்கா எவ்ளோகேவலமா பேசுதுங்க பலரும் இதுகள் பேசினால் கேவலமா சிரிக்குறாங்க வாய்திறந்தால் பொய்களே கொட்டுதுன்னும் சொல்லுறாங்க மோடிஜி கேட்டதுலே தப்பே இல்லீங்க எவ்ளோதான் காந்துக்காமலேபோனாலும் இதுகலந்து மற்றகாங்கிரெஸ் பாலோயர்ஸ் பேசும் விதம் ஆபாசமாயிருக்கு எவ்ளோவெறுப்பு கொட்டுறாங்கோ


subramanian
மே 08, 2024 22:25

ராகுலுக்கு பொறாமை மற்றும் ஆச்சர்யம், நமக்கு பத்து வருடம் அவ்வளவு கொடுத்தவர்கள் இப்போ எவ்வளவு கொடுத்து உள்ளார்கள் என்று


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
மே 08, 2024 19:25

எப்பா தம்பி ராகுல் நான் வந்துட்டு ஆயிரம் கோடிக்கு மேல் வாங்கியிருக்கிறேன், நீ எவ்வளவு வாங்கி இருக்கிறாய் அப்படி கேட்டா அதுல நியாயம் இருக்கிறது


skv srinivasankrishnaveni
மே 09, 2024 06:43

நீங்கள்தான் எண்ணிக்கொடுத்தாப்போல pinaaththureengka


pmsamy
மே 08, 2024 19:17

காசு வாங்குனது மோடி, கேள்வி கேட்கிறதும் மோடி


M Ramachandran
மே 08, 2024 19:08

இந்த பதில் இஙகுள்ள தில்லு முல்லு கட்சிக்கும் பொருந்தும் என்று ஸூசக மாக கூறுகிறீர்களா?


Easwar Kamal
மே 08, 2024 17:50

மோடி அவரகள் எல்லா ஹிந்து கோவில்களுக்கும் அப்படியே மசூதி மற்றும் தேவாலயங்களுக்கு போய் வரலாமே முஸ்லீம் மற்றும் கிறிஸ்டியன் இந்த நாட்டின் பிரஜையைகள் அவ்ரகளும் போற்ற பட வேண்டும் யாருக்கு தெரியும் மற்றோரு பிறவி இருந்தால் முஸ்லீம் மற்றும் கிறிஸ்டியன் குடும்பத்தில் பிறக்கலாம் யார் கண்டது இந்த மதங்கள் எல்லாம் நாம் பிறக்கும் முன்பே தோன்றியது நாம் இறந்தாலும் கூட இந்த மதங்கள் இருக்கும்


ஆரூர் ரங்
மே 08, 2024 20:09

அஜ்மீர் தர்காவுக்கு மோதி சென்று வந்தாரே.


V RAMASWAMY
மே 08, 2024 17:32

உங்கள் கட்சிக்கோ உங்க குடும்ப உறுப்பினர் எவருக்குமோ இம்மாதிரி கேள்வி கேட்கும் தகுதி இருக்கிறதா என்பதை முதலில் யோசிக்கவேண்டும்


J.V. Iyer
மே 08, 2024 17:22

குடும்ப அரசியலை அடியோடு ஒழிப்பது ஒவ்வொருவரின் கடமை


அனுபமா
மே 08, 2024 17:00

இவுருதான் சௌக்கிதார் ஆச்சே... எல்லாத்தையும்.கோட்டை உட்டாச்சு.


A su
மே 08, 2024 16:50

அட இவ்வளவு நாட்கள் ஓர் பத்தி இல்லாத பிரதமர்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ