உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசின் உர ஆலையில் 212 பேருக்கு டிரெய்னி வாய்ப்பு: டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு சான்ஸ்!

மத்திய அரசின் உர ஆலையில் 212 பேருக்கு டிரெய்னி வாய்ப்பு: டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு சான்ஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயான் லிமிடெட் நிறுவனத்தில் 212 காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 21.ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயான லிமிடெட் ( Hindustan Urvarak & Rasayan LTD)நிறுவனத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பட்டதாரி பொறியாளர் பயிற்சியாளர்- 67,டிப்ளமோ பொறியாளர் பயிற்சியாளர்- 145,

கல்வித் தகுதி என்ன?

பட்டதாரி பொறியாளர் பயிற்சியாளர் பணியிடங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில், வேதியியல், எலக்ட்ரிக்கல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.டிப்ளமோ பொறியாளர் பயிற்சியாளர் பணியிடங்களுக்கு இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

பட்டதாரி பொறியாளர் பயிற்சியாளர் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.டிப்ளமோ பொறியாளர் பயிற்சியாளர் பணியிடங்களுக்கு, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்ச 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்வது எப்படி?

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம்: ரூ. 750.

விண்ணப்பிப்பது எப்படி?

https://career.hurl.net.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பாமரன்
அக் 01, 2024 08:44

இந்த மாதிரி நூறு இருநூறு வேலைக்கு மார்க்கெட்டிங் பண்ணிக்கிட்டு இருந்தா.... அதுவும் எங்கேயோ தொலைதூரத்தில் ட்ரைனீ வேலைக்கு... நம்ம கம்பெனி சொன்ன வருஷத்துக்கு ரெண்டு கோடி ரீச் ஆக எவ்ளோ நூற்றாண்டு ஆகும்... இதுல அப்ளிகேஷனுக்கே காசு வேற... ...ஸ்ஸ்ஸ் இதுலாம் காங் டீம்கா காரணுவ கண்ணுல பட்டா மீம்ஸ் போட்டு எப்படியெல்லாம் கலாய்ப்பாங்கன்னு நினைச்சாலே கிலியா இருக்கு...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை