மேலும் செய்திகள்
மகனை கொன்று தற்கொலைக்கு முயற்சித்த தாய்
10-Nov-2024
கோனணகுன்டே: பெலகாவியைச் சேர்ந்தவர் பிரபு, 32. பெங்களூரு கோனணகுன்டேயில் தங்கி இருந்து கூலி வேலை செய்தார்.அப்போது அவருக்கும், பிரியங்கா, 27, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். குழந்தை இல்லை. திருமணத்திற்கு பின் மனைவியின் நடத்தையில், கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தினமும் தம்பதி சண்டையிட்டுக் கொண்டனர்.நேற்று முன் தினம் இரவு, குடிபோதையில் வீட்டிற்கு வந்த பிரபு, பிரியங்காவின் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இருவர் உடலிலும் தீப்பிடித்தது. அலறி அடித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து இருவரையும் மீட்டனர்.ஆனாலும் பலத்த தீக்காயம் அடைந்ததால் சிகிச்சைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணைநடக்கிறது.நடத்தை சந்தேகத்தில் மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொல்ல கணவர் முயன்றார்.
10-Nov-2024