மேலும் செய்திகள்
ககன்யான் திட்டத்திற்கான பாராசூட் சோதனை; வெற்றிகரமாக முடித்தது இஸ்ரோ
5 hour(s) ago | 1
துமகூரு: “காங்கிரசோ பா.ஜ.,வோ யார் சீட் கொடுத்தாலும், நான் போட்டியிடமாட்டேன்,” என பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் மாதுசாமி தெரிவித்தார்.துமகூரில் நேற்று அவர் கூறியதாவது:காங்கிரஸ் சீட் கொடுத்தாலும், நான் போட்டியிடமாட்டேன். பா.ஜ., சீட்டும் எனக்கு தேவையில்லை. சோமண்ணாவை ஓரங்கட்டி, எனக்கு சீட் கொடுக்க தேவையில்லை. லோக்சபா தேர்தலில் போட்டியிடும் ஆசை, எனக்கு போய்விட்டது. கட்சியை ஆரோக்கிய முறையில், முன்னடத்தும் எண்ணம் யாருக்கும் இல்லை.கட்டாயத்தின் பேரில், எனக்கு சீட் கொடுக்க தேவையில்லை. என் அடுத்தகட்ட செயல்பாடு குறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை. ஏற்கனவே நலம் விரும்பிகளுடன், ஆலோசனை நடத்தினேன். என் உணர்வுகளை யார் மீதும் திணிக்கமாட்டேன். அனைவருடனும் ஆலோசித்த பின், ஒரு முடிவுக்கு வருவேன். இதை ஊடகத்தினரிடம் தெரிவிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
5 hour(s) ago | 1