உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒத்திகை பார்ப்பதில்லை!

ஒத்திகை பார்ப்பதில்லை!

ஓட்டு திருட்டு பற்றி பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தும் ராகுல், பொதுமக்கள் முன் பேச முறையாக ஒத்திகை பார்ப்பதில்லை. 2023ல் முறைகேடு நடந்ததாக கூறும் நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மீது குற்றஞ்சாட்டுவது ஏற்புடையதல்ல. - ரவி சங்கர் பிரசாத், முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,

மாயமான தங்கம் எங்கே?

அய்யப்ப சங்கமம் நிகழ்ச்சிக்கு தயாராகும் கேரள அரசு, அய்யப்பனுக்கு சொந்தமான 4 கிலோ தங்கம் மாயமானது பற்றி எடுத்துரைக்க வேண்டும். தங்க நகைகளை, அரசு அதிகாரிகளே திருடியிருக்க வாய்ப்புள்ளது. சங்கமம் நிகழ்வு, தங்கத்தை திருடிய பாவத்திற்காக நடத்தப்படுகிறதா? - வி.டி.சதீசன் கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்

குழந்தைத்தனமானது!

ஓட்டுத்திருட்டு பற்றி ராகுலின் புகார், குழந்தைத்தனமானது. உள்ளூர் அல்லது பூத் அளவிலான செயல்பாடு பற்றிய விபரம் தெரியாததால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தி வருகிறார். கட்சிகள் சார்பில் உறுப்பினர்கள் நியமித்து, திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது வழக்கம். - சுனில் தட்கரே, மஹா., மாநில தலைவர், தேசியவாத காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

HoneyBee
செப் 20, 2025 17:55

பொய் சொல்லி ஏமாற்றாமல் இருந்தால் தான் கான்கிரஸ்..


joe
செப் 20, 2025 12:55

காங்கிரசின் ஊழலை மறைக்க ராகுல் கண்டதையும் பேசி கதை விட்டு மக்களையும் அரசியல் வாதிகளையும் குழப்புகிறார் .வேண்டாத வேலை .ப்ரியங்காவின் புருஷன் ஒரு ஊழல் பேர்வழி .இதையும் இந்த ராகுல் அறியவில்லையா ?ஊழல் குடும்பமே சோனியாவின் குடும்பம் .இதை ராகுல் அறியவில்லையா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை