உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வில் சேர எனக்கு அழைப்பு: துணை முதல்வர் சிவகுமார் குண்டு

பா.ஜ.,வில் சேர எனக்கு அழைப்பு: துணை முதல்வர் சிவகுமார் குண்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: “கடந்த 2019ம் ஆண்டே பா.ஜ.,வில் இணையும்படி எனக்கு அழைப்பு வந்தது. கட்சியின் விசுவாசத்திற்காக சிறைக்கு சென்றேன்,” என, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் புதிய 'குண்டு' போட்டுள்ளார். 'கர்நாடகாவில் முதல்வர் பதவிக்காக சித்தராமையா, துணை முதல்வர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தனக்கு பதவி கிடைக்காவிட்டால், ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 50 பேருடன் சிவகுமார், எங்கள் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளது' என, சில மாதங்களுக்கு முன்பு, பா.ஜ., தலைவர்கள் கிண்டல் அடிக்கும் வகையில் கூறினர். 'கர்நாடகாவின் ஏக்நாத் ஷிண்டேவாக சிவகுமார் மாறுவார்' என்றும் கூறினர். இந்நிலையில் கன்னட திரையுலகின் இளம் இயக்குநர் கே.எம்.ரகு 'விசுவாசத்தின் சின்னம் டி.கே.சிவகுமார்' என்ற பெயரில் புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா, பெங்களூரில் நடந்தது. விழாவில் துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது: அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. 2019ல் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி ஆட்சியில் 17 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தனர். அப்போது நான் கனகபுராவில் இருந்தேன். பெங்களூருக்கு வந்து எம்.எல்.ஏ.,க்களை சிலரை, எம்.எல்.ஏ.,க்கள் பவனுக்கு அழைத்துச் சென்று பேசினேன். அப்போது என்னுடன் என் சகோதரர் சுரேஷும் இருந்தார். அந்த நேரத்தில் டில்லியில் உள்ள வருமான வரி அலுவலக டி.ஜி.,யிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. என்னிடம் பா.ஜ., தலைவர் ஒருவர் பேசினார். அவர் பெயரை நான் கூற மாட்டேன். 'பா.ஜ,வுக்கு ஆதரவு அளித்து, துணை முதல்வர் ஆகின்றீர்களா அல்லது சிறைக்கு செல்கிறீர்களா?' என்று கேட்டார். சிறைக்கு செல்லலாம் என்று முடிவு எடுத்தேன். எம்.எல்.ஏ.,க்களை அனுப்பி வைத்தேன். பின், நான் சிறைக்கும் சென்றேன். இவ்வாறு அவர் பேசினார். சித்தராமையா முதல்வர் பதவியை விட்டு தரமாட்டார் என்ற பயத்தில், பா.ஜ.,வில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாக சிவகுமார் கூறுகிறார். நாங்கள் யாரும் அவரை அழைக்கவில்லை. - அசோக் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

V Venkatachalam
அக் 17, 2025 13:26

தலைமைக்கும் சித்துக்கும் சிண்டு தானே இது?


Anbuselvan
அக் 17, 2025 12:48

திரு சித்தராமையா அவர்கள் இருக்கும் வரை முதல்வர் கனவு நிறைவேறாது என்பது இவருக்கே தெரியும்.


Sangi Mangi
அக் 17, 2025 11:48

வன்மம் மிகுந்து விட்டது..


V Venkatachalam
அக் 17, 2025 11:21

தினமலருக்கு வாழ்த்துக்கள்.


Anand
அக் 17, 2025 10:43

இப்படி சொன்னாலாவது சொத்தைராமய்யா ஏதாவது மனசு மாறுவானா என நினைக்கிறார்.


bharathi
அக் 17, 2025 09:03

Better to dissolve the party


Barakat Ali
அக் 17, 2025 08:27

கனிமொழிதான் துண்டு போட்டாங்கன்னு நினைச்சேன் ..... நீங்களுமா ????


ஆரூர் ரங்
அக் 17, 2025 08:19

சாமர்த்தியமா ரெண்டு பக்கமும் துண்டு போடுவார். ஒருபுறம் ஈஷா விழாவில் கலந்து கொண்டார். சட்டசபையில் ஆர்எஸ்எஸ் சின் பாரதபக்தி கீதத்தை பாடி காங் ஆட்களையும் வெறுப்பேற்றியவர்.


VenuKopal, S
அக் 17, 2025 08:13

எப்படி இங்கே ஒருவருக்கு ஆயுள் plastic சேர் அதைப் போல இவருக்கு வெறும் டம்மி போஸ்ட். அதுவும் இதுவே கடைசி. வெட்டி அரசியல் செய்து 5000 கோடி பொதுமக்கள் பணத்தை சூறையாடினர். இவர் இப்போ uttathamar...எல்லாம் கால கொடுமை


S.V.Srinivasan
அக் 17, 2025 07:59

வாங்கண்ணே அடுத்த கர்நாடகா தேர்தலில பி ஜே பி சார்பா நீங்கதான் முதலமைச்சர் வேட்பாளர்.


சமீபத்திய செய்தி