உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்குறுதிகளை புதிய அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன்; தோல்விக்கு பிறகு மவுனம் கலைத்தார் தேஜஸ்வி

வாக்குறுதிகளை புதிய அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன்; தோல்விக்கு பிறகு மவுனம் கலைத்தார் தேஜஸ்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் முதல்வராக 10வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்ற நிலையில், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆளும் தேஜ கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.இது தொடர்பாக, தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: பீஹார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்ற பீஹார் அரசின் அனைத்து அமைச்சர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.புதிய அரசு மக்களின் விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும். அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றும். பீஹார் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் நான் நம்புகிறேன். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.பீஹார் சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு தேஜஸ்வி மவுனம் கலைத்து, புதிய முதல்வர் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Venugopal, S
நவ 20, 2025 21:51

நீங்கள் நம்பினால் என்ன நம்பாமல் விட்டால் என்ன. சூரிய உதயம் தினமும் வழக்கம் போல இருக்கும். ரொம்ப நாளைக்கு மக்களை அறிவிலிகள் என்று நினைக்கும் ஆணவம் பிடித்த காட்டு கட்சிக்கு மக்கள் மரண அடி கொடுத்தது நினைவில் கொள்ள வேண்டும். போய் அரசியல் மற்றும் 9 ஆம் வகுப்பில் சேர்ந்து படித்து கரை சேரலாம்...படிப்பதற்கு வயது இல்லை. கடைசி மூச்சு இருக்கும் வரை பதவியில் இருக்க வேண்டும் என்ற வெறியை போல கடைசி மூச்சு வரை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். 8 ஆம் கிளாஸ் ஃபெயில்


Vasan
நவ 20, 2025 20:54

அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை பற்றி தானே சொல்கிறீர்கள்? தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை அல்லவே ? இந்த கேள்வியை நான் ஒரு சாதாரண வாசகராய் கேட்கிறேன்.


Santhakumar Srinivasalu
நவ 20, 2025 19:46

ராகுலை நம்பி ஏமாந்த பிறகு வேற வழி!


V Venkatachalam, Chennai-87
நவ 20, 2025 19:31

புதிய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று நம்புகிறேன் தேஜஸ்வி மவுனம் கலைப்பு....நம்பித்தானே ஆகணும். கடைசி சுற்றுகளில் எதிர் பார்ப்பை மீறி ஜயித்து விட்டார். அந்த ஷாக்கில் வாயடைத்து போயிட்டார். பாவம். நல்ல வேளை இப்ப ஒழுங்கா பேசியிருக்கார்.. அது வரை சரி.


புதிய வீடியோ