உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்; புடினிடம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மோடி

வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்; புடினிடம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரஷ்ய அதிபர் புடினுக்கு, பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அப்போது, இந்தியாவிற்கு வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது 73வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.அப்போது, அவர் நல்ல ஆரோக்கியத்துடன், அவரது (புடின்) அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடி புடினை அழைத்தார்.கடந்த வாரம், புடின் தனது இந்திய வருகையை உறுதிசெய்து, தனது, அன்பான நண்பர் பிரதமர் மோடி, புத்திசாலியான நபர் என்று பாராட்டி இருந்தார். தற்போது தொலைபேசி அழைப்பில் இந்தியாவிற்கு வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் மோடி புடினிடம் தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில், பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை