உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒட்டு இயந்திரம் மீது எனக்கு என்றுமே நம்பிக்கை இல்லை: அகிலேஷ்

ஒட்டு இயந்திரம் மீது எனக்கு என்றுமே நம்பிக்கை இல்லை: அகிலேஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உ.பி.யில் 80 லோக்சபா தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் நம்பகத்தன்மை மீதான எனது கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என அக்கட்சியின் லோக்சபா எம்.பி.யான அகிலேஷ் யாதவ் பேசினார்.பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு உ.பி.யின் பிரதான எதிர்கட்சியான சமாஜ்வாதி கட்சி தலைவரும், கணோஜ் லோக்சபா தொகுதி எம்.பி.யான அகிலேஷ் பேசியது,ஓட்டு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மை குறித்து நேற்றும் பேசினேன், இன்றும் பேசுகிறேன். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உ.பி.யில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி அனைத்து தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் ஓட்டு இயந்திரத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இதில் எனது கருத்தை மாற்றிக்கொள்ளமாட்டேன். ஓட்டு இயந்திரத்தின் பயன்பாட்டை நிறுத்தும் வரை இது ஒருபோதும் தீர்க்கப்படாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

TSRSethu
ஜூலை 03, 2024 10:33

கள்ள ஓட்டுக்களையும் booths capture செய்வதையும் நம்பி அரசியல் கட்சி நடத்துவோர் ஓட்டு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறுவது ஆச்சரியமளிக்கும் விஷயமில்லை.


kulandai kannan
ஜூலை 03, 2024 08:35

அல்பனுக்கு ஐஸ்வர்யம்..


P SURESHBABU
ஜூலை 03, 2024 07:16

அப்படீன்னா உங்க கட்சி ஜெயிச்ச எல்லா தொகுதியிலும் மறு தேர்தல் மின்னணு இயந்திரங்களுக்கு பதிலாக ஓட்டு சீட்டு போட்டு நடத்தலாமா?


C.SRIRAM
ஜூலை 02, 2024 22:50

உன் மீதே யாருக்கும் நம்பிக்கை இல்லை


theruvasagan
ஜூலை 02, 2024 22:15

கள்ள ஓட்டுல ஜெயிக்கிற த்ரில் இதுல வராது. அதனாலதான் சிலருக்கு ஓட்டு மெஷின் பிடிக்கறதில்லை.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 02, 2024 21:09

அப்பொழுது நீங்கள் நிஜமாகவே வெற்றி பெறவில்லை என்கிறீர்களா? இவ்வளவு உறுதியாக அகிலேஷ் கூறுவதை பார்த்தால் அகிலேஷ் ஏதோ தில்லுமுல்லு செய்து தான் வெற்றி பெற்று உள்ளார் என்று அவரே ஒத்துக் கொள்கிறாரோ.


சுலைமான்
ஜூலை 02, 2024 21:05

அப்புறம் என்னத்துக்கு ஓட்டுப்பதிவு எந்திரத்துல வந்த ரிசல்ட்ட வச்சி எம்பி பதவிய அனுபவிக்கிற? ராஜினாமா பண்ணிட்டு போ


Mohanakrishnan
ஜூலை 02, 2024 21:03

திருட்டு கூட்டம், பூத் கொள்ளை திருடர்கள் நம்ப மாட்டார்கள்


N Sasikumar Yadhav
ஜூலை 02, 2024 20:48

அப்ப கட்சியை கலைக்க வேண்டியதுதானே


RAAJ68
ஜூலை 02, 2024 20:45

சரி அப்படின்னா உங்கள் எம்பிக்கள் எல்லோரையும் ராஜினாமா செய்யச் சொல்லுங்க. வோட்டிங் மிஷினில் பித்தலாட்டம் செய்து அவர்கள் வெற்றி அடைந்து விட்டார்கள் என்று எடுத்துக் கொள்வோம். எனவே செல்லாது.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி