உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்

என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: ''எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். தேசமே முதன்மையானது'' என காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்து உள்ளார்.கேரளா மாநிலம், கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் சசி தரூர் பேசியதாவது: கட்சியின் மீது மதிப்பு மற்றும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். தேசிய பாதுகாப்பு நலனுக்காக மற்ற கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் அவசியம். எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். தேசமே முதன்மையானது. நீங்கள் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அந்த கட்சியின் நோக்கம், அதன் சொந்த வழியில் ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்குவதாகும். ராணுவம் மற்றும் அரசாங்கத்தை ஆதரிப்பதில் எனது நிலைப்பாட்டை பலர் விமர்சித்துள்ளனர். ஆனால் நான் நாட்டிற்கு இதுதான் சரியானது என்று நம்புவதால் நான் எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன்.நான் இந்தியாவைப் பற்றி பேசும் போது என் கட்சியை விரும்புபவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்காகவும் பேசுகிறேன். அது மற்ற கட்சிகளுக்கும் பொருந்த வேண்டும் என்று நான் நம்புகிறேன். நான் இதை என் கட்சிக்கு மட்டுமல்ல. எல்லாக் கட்சிகளுக்கும் சொல்கிறேன். நாடு ஆபத்தில் இருக்கும்போது வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் சசி தரூர் கூறிய கருத்துக்கள், ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்குவதற்காக, வெளிநாடுகளுக்கு சென்ற அனைத்துக் கட்சி குழுவிற்கு தலைமை தாங்கிய பிறகு, காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக பேசப்படுவது குறித்து மறைமுகமாக விளக்கம் அளித்தது போல் அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Anand
ஜூலை 20, 2025 18:38

தேச பற்று இல்லாத ஒரு வெளி நாட்டு நரிகள் கூட்டம் நடத்தும் கட்சி , காங்கிரஸ் கட்சி அங்கு தேச பற்று உள்ள சசி தரூருக்கு மரியாதை கிடையாது


venugopal s
ஜூலை 20, 2025 18:33

அதென்ன மாயமோ தெரியவில்லை,அவர்களுடன் சேர்ந்தாலே போலியான தேசப்பற்று வந்து விடுகிறது!


J.Isaac
ஜூலை 20, 2025 15:15

முதலில் பதவி விலகிவிட்டு தத்துவம் பேச வேண்டும்


Sudarsan Ragavendran
ஜூலை 20, 2025 17:36

ஜெலுசில் வேணுமா ?


தமிழ்வேள்
ஜூலை 20, 2025 14:51

ஹிந்து தர்ம எதிர்ப்பு, இஸ்லாமிய கிறிஸ்தவ அடிமைத்தனம், பாரதத்தை சுரண்டி வெளிநாடுகளில் பணம் பதுக்கல் போதைக்கடத்தல் பெண்பித்தூ பயங்கரவாதம் இவைதான் காங்கிரஸ் கட்சி அதன் தலைமைக்குடும்பம் இரண்டாம் நிலை தலைகள் கூறுகெட்ட தொண்டர்களுக்கு முதன்மை ஆனவை.....


J.Isaac
ஜூலை 20, 2025 16:57

இந்தியாவில் கிறிஸ்தவர்கள் 3 % தான்


Perumal Pillai
ஜூலை 20, 2025 14:24

UN l பெரிய பொறுப்பில் இருந்தவர், பல நூல்களை எழுதிய ஒரு அறிவாளி ஒரு கோமாளி யின் கட்சியில் எப்படி பணி ஆற்ற முடியும்?


lana
ஜூலை 20, 2025 14:20

இன்றைய காங்கிரஸ் தலைவர்களுக்கு மட்டுமே தேசத்தின் மீது அக்கறை பற்றுதல் இல்லை.


V Venkatachalam
ஜூலை 20, 2025 12:30

கான்கிராஸ் கட்சிக்குள் சசி பற்றி கருத்து வேறுபாடுகள் இருப்பதற்கு சசியின் பேச்சு மறைமுக விளக்கமாக இருக்கிறது. இதில் என்ன மறைமுக விளக்கம் இருக்கிறது. நேரடியான விளக்கம் தானே. கட்சியில் இருப்பது 4 பேர். சோனியா ராகுல் பிரியங்கா மல்லிகார்ஜுன் கார்கே. ஆட்டைய போடும் வாத்ரா கட்சிக்குள் இருக்காரான்னு தெரியாது. முன்னாடி ம.மோ சி யை வைத்து கொண்டு சூப்பர் பவர் சோனியா ஆட்சியை நடத்தினார். இப்போ கார்கேயை வைத்து க்கொண்டு கட்சியை நடத்த தாளம் போடுது.. சோனியா சொல்றது தானே கருத்து.


Venkatesan.v
ஜூலை 20, 2025 11:10

என்ன கேசுல மாட்டுகிட்டார்னு தெரியல


rajan
ஜூலை 20, 2025 13:25

காஸ்மீர் காதலி


sridhar
ஜூலை 20, 2025 10:54

என்னது, தேசமே முக்கியமா காங்கிரஸில் இருந்து கொண்டு எப்படி இப்படி திமிராக பேசலாம் .


krishnan
ஜூலை 20, 2025 10:31

நாட்டைப்ற்றி கவலைப்படும் நாட்டுப்பற்று, இறுகப்பற்றுக, 'கை'களால் பற்றுக, விரைவில் நீங்களும் அமைச்சர் ஆகலாம் வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை