உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தடியால் அடிப்பேன்!

தடியால் அடிப்பேன்!

ஓட்டுக்காக நான் எந்த ஜாதியையும் சார்ந்து இருந்ததில்லை. ஒரு முறை 50,000 பேர் கூடியிருந்த பொதுக் கூட்டத்தில், 'ஜாதி பெருமை பேசினால் யாராக இருந்தாலும் தடியால் அடிப்பேன்' என்றேன். இதனால் பின்னடைவை சந்திப்பேன் என நண்பர்கள் எச்சரித்தனர். அதை நான் பொருட்படுத்தவில்லை. நிதின் கட்கரி, மத்திய அமைச்சர், பா.ஜ.,

கர்நாடகாவில் நம்ம ஆட்சி!

கர்நாடகாவில் காங்கிரசின் துக்ளக் தர்பார் ஆட்சி நடந்து வருகிறது. எத்தனை நாள் இப்படியே ஆட்சியை ஓட்டுகின்றனர் என்று பார்க்கிறேன். தற்போதைய அரசியல் சூழல் பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளது. கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்தால், நாம் மீண்டும் 100 சதவீதம் ஆட்சிக்கு வருவோம்.எடியூரப்பா, மூத்த தலைவர், பா.ஜ.,

நாட்கள் எண்ணப்படுகின்றன!

அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, போலீஸ் அதிகாரத்தை வைத்து காங்கிரஸ் நிர்வாகிகளை ஒடுக்க நினைக்கிறார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோயின் செல்வாக்கை பார்த்து பயம். ஹிமந்த பிஸ்வ பதவியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. விரைவில் எதிர்க்கட்சி வரிசையில் அவர் அமர்வார்.பவன் கெரா, செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை