உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யமுனையை லண்டனின் தேம்ஸ் நதியைப் போல மாற்றுவேன்: அமித் ஷா உறுதி

யமுனையை லண்டனின் தேம்ஸ் நதியைப் போல மாற்றுவேன்: அமித் ஷா உறுதி

புதுடில்லி:'ஏழு ஆண்டுகளில் யமுனையை சுத்தம் செய்து லண்டனின் தேம்ஸ் நதியைப் போல மாற்றுவேன்,' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்தார்.டில்லி சட்டசபை தேர்தல் பிப்., 5 ம் தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை பிப்.,8 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.இந்நிலையில் இன்று தேர்தல் அறிக்கையின் மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதியை பா.ஜ., வெளியிட்டது. இதனை வெளியிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: டில்லியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு மற்றும் ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும் , குஜராத்தில் உள்ள சபர்மதி நதிக்கரையைப் போலவே புதிய யமுனா நதிக்கரையை உருவாக்குவோம் என்றார்.டில்லியில் அமித் ஷா செய்தியாளர்களிடம் பேசியதாவது:50,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க உறுதியளிக்கிறோம். டில்லி மக்களுக்கு 20 லட்சம் சுயவேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.டில்லியின் 1,700 அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வாங்குதல், விற்றல் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட முழு உரிமைகளையும் பாஜ வழங்கும்.ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிப்போம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அதை அங்கீகரிப்போம்.ஆம் ஆத்மி ஆட்சியின் போது சீல் வைக்கப்பட்ட 13,000 கடைகளைத் திறப்பதற்கும் நாங்கள் பாடுபடுவோம். 13,000 பேருந்துகளையும் இ-பஸ்களாக மாற்றுவோம்.ஏழு ஆண்டுகளில் யமுனையை சுத்தம் செய்து லண்டனின் தேம்ஸ் நதியைப் போல மாற்றுவேன். டில்லி மக்கள் முன்னிலையில் யமுனையில் நீராடுவேன். அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி மக்கள் உங்கள் உலகப் புகழ்பெற்ற யமுனையில் நீராடுவதற்காகக் காத்திருக்கிறார்கள். யமுனையில் இல்லையென்றால், அவர் மகா கும்பமேளாவுக்குச் சென்று அங்கு நீராடலாம், தனது பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம். இவ்வாறு அமித் ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

தத்வமசி
ஜன 26, 2025 12:09

நமக்கு திராவிடத்தின் கூவம் சுத்திகரிப்பு திட்டம் - முதலை, சர்க்கரை மூட்டை - எறும்பு, சாக்கு பை - கரையான், நாலாயிரம் கோடியில் நீர் வடிகால் என்று கேட்டு, படித்து, கண்டு வழக்கத்தால் நமக்கு நகைப்பு மட்டுமே தெரியும். அவர் தேம்ஸ் நதியை குறிப்பிட்டு சொல்லி இருக்க வேண்டாம். குஜராத்தின் சாபர்மதி நதியைக் கூறி இருந்தாலே போதும். நாமத்தான் கும்மிடிப்பூண்டியை தாண்டியது கிடையாது, முரசொலி, விடுதலை தவிர வேறு படிப்பது கிடையாது, எப்படி எதெல்லாம் நமக்குத் தெரிய வரும் ?


அப்பாவி
ஜன 26, 2025 06:28

இந்தியாவில் ஒரு நதி கூட சொல்லிக்குற மாதிரி சுத்தமா இல்லை. பேசாம ஆட்சியைப் புடிச்சு யமுனைங்கற பேரை தேம்ஸ் நு மாத்தி சாதனைன்னு மெடல் குத்திப்பாங்க.


அப்பாவி
ஜன 26, 2025 06:26

அடடே... அந்நிய அடையாளத்தை அழிக்கிறோம்னுட்டு தேம்ஸை கொண்டாரப் பாக்குறாரே... இந்த அநியாயத்தை கேப்பாரில்லையா?


Senthoora
ஜன 26, 2025 03:05

சக்தி சிவகங்கை என்னசொல்லுறீங்க, தேர்தலில் யாரு 10 வருசத்துக்குமுந்தி 100 நாளில் கங்கை சுத்தப்படுத்தப்படும், வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப்பணம் வந்துடும் என்று வாக்குறுதி கொடுத்தது என்று தெரியாதா?


Oviya Vijay
ஜன 25, 2025 21:45

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... எந்த அரசியல் கட்சியும் கொடுக்கும் வாக்குறுதிகளைக் கேட்கும் போது இந்த பாடல் தான் ஞாபகம் வருகிறது... எல்லாம் பதவி ஆசை...


Laddoo
ஜன 25, 2025 22:18

கட்டு கம்பெனி கிட்ட கொடுத்துப் பாருங்க. தேம்ஸ் நதியை கூவத்தை விட கேவலமா பண்ணுவாங்க. ஆர் யூ ரெடி?


veera
ஜன 25, 2025 22:46

பாவம் ஓவியர், கருணாநிதி கூவத்தை பத்தி சொன்னது கேட்டு கேட்டு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்


raja
ஜன 26, 2025 04:12

கூமுட்டை கொத்தடிமைகள் லுக்கு தெரியாது எங்க சப்பான் துணை முதல்வர் கோவத்தை சுத்த படுத்தி படகு விடுவோம் என்று சப்பானிடம் வாங்கிய கடனை எல்லாம் புறங்கை நக்கி ஏமாற்றி மொத்தத்தையும் இப்போ அடிச்ச 4000 கோடியை போல கொள்ளை அடிச்சது....


Ayyasamy
ஜன 25, 2025 21:33

First please perform then inform about the completion.


veera
ஜன 26, 2025 12:36

you may be in coma... please read newspaper... lot of delopments going on in the country without many of us knowledge


Shivam
ஜன 25, 2025 21:26

அதாவது ஆட்சி வேட்கை எந்த அளவுக்கு பேசச் சொல்கிறது. மாற்றுவேன் என்பது எவ்வளவு அபத்தம். இது சூப்பர் ஸ்டார் ரஜினி மாதிரி 20பேரை அசால்ட்டாக அடித்து வீழ்த்தும் வேலையா? அந்த மாற்றும் சூத்திரம் தெரிந்த ஆள் இவர் மட்டும் தானா? இதில் 10வருடம் ஆட்சி நடத்திய லட்சணம் வேறு. அது சரி தேம்ஸ் என்ன இப்போது புனித தீர்த்தம் ஓடும் ஆறா?


Ramesh Sargam
ஜன 25, 2025 20:27

அடுத்து சென்னையில் உள்ள கூவம் நதி, அடையாறு போன்றவற்றையும் தேம்ஸ் நதி போல மாற்றவேண்டும் அமைச்சரே. நன்றி.


திகழ்ஓவியன்
ஜன 25, 2025 21:07

என்று யோகி சாமியார் வந்தாரோ ஆண்டுக்கு 3000 கோடி ஒதுக்கி இதே JUMLA DIALOGE கேட்டு பழகிடிச்சு 30000 கோடி முழுங்கி இப்போ இவர் எவ்வளவு அந்த டெண்டர் யாருக்கு அதானிக்கு அப்போ எலெக்டரால் பாண்ட் சீக்கிரம் PURCHASE ஆகும்


முருகன்
ஜன 25, 2025 20:18

நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் தூய்மை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்


Sankar Ramu
ஜன 25, 2025 19:58

அதெல்லாம் நாடு நல்லாயிடும். என்ன இலவசம் இருக்கு ? நீட் தேர்வு , எல்லா பெண்களுக்கு ஆயிரம்னு , நகை கடன் தள்ளுபடின்னு கப்சா விடுங்க ஜெயிச்சிடலாம்.