உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்சி உத்தரவிட்டால் போட்டியிடுவேன்

கட்சி உத்தரவிட்டால் போட்டியிடுவேன்

மங்களூரு, : ''உடுப்பி - சிக்கமகளூரு லோக்சபா தொகுதியில், நான் போட்டியிட பா.ஜ., தலைமை உத்தரவிட்டால் போட்டியிடுவேன்,'' என மேலவை எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரி தெரிவித்தார்.தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:உடுப்பி - சிக்கமகளூரு லோக்சபா தொகுதியில், நான் போட்டியிட கட்சி உத்தரவிட்டால் போட்டியிடுவேன். ஆனால் இதுவரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.கட்சி தொடர்பாக பெங்களூரு, புதுடில்லியில் இருந்து அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. எதற்கு என்று தெரியவில்லை. விரைவில் உங்களுக்கு தெரிவிக்கிறேன். யாருக்கு சீட் என்பது குறித்து ஊடகங்களில் அறிவிப்புகள் வருகின்றன. கட்சி என்ன முடிவு எடுத்து உள்ளது என்று தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ