உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி பக்கமே வரமாட்டேன்: நிதின் கட்கரி

டில்லி பக்கமே வரமாட்டேன்: நிதின் கட்கரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காற்று மாசுபாடு காரணமாக எனக்கு டில்லிக்கு வர விருப்பமில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.தலைநகர் டில்லியில் ஏ.க்யூ.ஐ., எனப்படும் காற்றின் தரக்குறியீடு கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குளிர் காலங்களில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர்.இதனை கட்டுப்படுத்த 21 அம்ச செயல்திட்டத்தை மாநில அரசு நடவடிக்கைகளை எடுக்கிறது இருப்பினும், தலைநகர் டில்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.இந்நிலையில் மஹாராஷ்டிராவின் நாக்பூர் லோக்சபா எம்.பி.,யும் , மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி நிகழ்ச்சி ஒன்றில் கூறியது, டில்லி வர எனக்கு விருப்பம் இல்லை. காரணம் காற்று மாசு அதிகரிப்பே. ஒவ்வொரு முறையும் தலைநகர் டில்லி வரும் போதெல்லாம் எனக்கு தொற்று பாதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sivagiri
டிச 04, 2024 12:33

கரெக்டு . . .சோனியாம்மா, கோவாவில் செட்டில், பிரியங்கா சிம்லாவில் செட்டில், ராகுல் இத்தாலியில் செட்டில், கார்கே பெங்களூர், மற்ற எல்லா காங்கிரஸ் கம்பெனி மேனேஜர்களும் டில்லி கிடையாது... எல்லாரும் பறவைகள் போல சீசனுக்கு மட்டும் வந்து போயிட்டு இருக்காங்க. பாவம் கெஜாவால் மட்டும் அசுத்த காற்றை அனுபவிக்க வேண்டுமா? ஆக, தலைநகரை கொஞ்சம் கீழேயோ, மேலேயே கொண்டு போயி தேவலைதான் . . .


Bye Pass
டிச 04, 2024 10:30

நாக்பூர் தலைநகராக வேண்டும் ..எல்லா வசதிகளும் நாக்பூரில் இருக்கின்றன ..குறிப்பாக ரேஷிம்பாகில் தலைநகரை மையமாக தேர்வு செய்யலாம்


Columbus
டிச 04, 2024 00:32

Simple solution. Change the capital from New Delhi to Prayagraj (Allahabad), Varanasi or Nagpur.


தாமரை மலர்கிறது
டிச 03, 2024 22:32

நிதின் கட்காரி தான் அடுத்த பிரதமர். அவர் இப்படி சொல்வது சரியல்ல.


Kundalakesi
டிச 03, 2024 22:04

மக்கள் செத்தால் இவர்களுக்கு என்ன லாபம். மக்களை கட்டுப்படுத்த தெரியவில்லை என்றால் ராஜினாமா செய்யட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை