உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மரண சேம்பர்களாக மாறிய பயிற்சி மையங்கள்: சுப்ரீம் கோர்ட் ‛‛சுளீர்

மரண சேம்பர்களாக மாறிய பயிற்சி மையங்கள்: சுப்ரீம் கோர்ட் ‛‛சுளீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மழைநீரில் மூழ்கி 3 ஐ.ஏ.எஸ்., பயிற்சி மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‛‛ பயிற்சி மையங்கள், மரண சேம்பர்களாக மாறி வருகின்றன'' எனக்கூறியுள்ளது.

போராட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர், டில்லியில் பெய்த கனமழை காரணமாக பழைய ராஜேந்திரா நகரில் அமைந்துள்ள ‛ ராவ்' யுபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி மையத்தின் கீழே உள்ள பேஸ்மென்ட் தளத்தில் உள்ள நூலகத்தில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் 3 ஐ.ஏ.எஸ்., பயிற்சி மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூட உத்தரவு

இது குறித்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், உரிய விதிகளை பின்பற்றாத பயிற்சி மையங்களை மூடும்படி உத்தரவிட்டது. இதை எதிர்த்து பயிற்சி மையங்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.இதனை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜால் புயான் ஆகியோரை கொண்ட அமர்வு கூறியதாவது: பயிற்சி மையங்களை அதிகாரிகள் முறைப்படுத்தவில்லை. டில்லியில் மட்டும் நூற்றுக்கணக்கான மையங்கள் செயல்படும் நிலையில், அதற்கென விதிகள் ஏதும் வகுக்கப்பட்டு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

அபராதம்

இந்த மையங்கள், மரண சேம்பர்களாக மாறிவிட்டன. விதிகளை பின்பற்றாதவரை, வகுப்புகளை ஆன்லைன் முறையில் நடத்தலாம். இந்த மையங்கள் மாணவர்களின் விருப்பங்களோடு விளையாடுகின்றன. முறையான காற்றோட்டம், பாதுகாப்பான நுழைவு மற்றும் வெளியேறும் வழி அமைக்கப்பட வேண்டும். மாணவர்கள் மரணம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். மேலும் பயிற்சி மையங்களின் கூட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sridhar
ஆக 05, 2024 17:20

மக்களின் நலனுக்காக அரசின் அதிகாரிகள் நேர்மையாக பாதுகாப்பு அம்சங்களை வழிகாட்டுதல்படி சோதனைகள் செய்து நேர்மையுடன் அனுமதி கொடுத்தால் விபத்துகள் தடுக்கப்படும். அரசியல்வாதிகள் தலையீடு இருக்க கூடாது. துறை வல்லுனர்களின் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும். மக்கள் நேர்மைக்கும் உண்மைக்கும் ஆதரவு அளிக்க வேண்டும்.


KRISHNAN R
ஆக 05, 2024 16:57

டில்லியில் மட்டும் அல்ல. எல்லா இடங்களிலும் இதே நிலை. போட்டி அதிகமுள்ளது. .. எதுவும்... சொல்ல தோணவில்லை.


அப்பாவி
ஆக 05, 2024 16:36

போன வருஷம் வர்சியில் கல்விக்கோவில்களா இருந்துச்சாக்கும். இன்னிக்கி பொங்குறாங்க.


Diraviam s
ஆக 05, 2024 15:30

Most of the training centres are over crowded. 300 to 500 students in one small hall without proper ventilation & insufficient AC. Incase of Fire accident students cannot exit. Govt should take efforts to inspect all these centres.


MUTHU
ஆக 05, 2024 20:02

போய் மாமூல் வாங்க நல்ல வழி சொல்கின்றீர்கள்.


சமூக நீதி
ஆக 05, 2024 14:55

எதுக்கு எவ்ளோ பிரச்சினை. பேசாம எல்லா தேர்வுகளையும் நிறுத்தி விட்டு சாதீய அடிப்படையிலான ஒதுக்கீட்டின் படி நியமிக்கலாம்


THIRUMALAI KUMAR
ஆக 06, 2024 10:23

முதலாவது வகுப்பில் இருந்து தேர்வை நிறுத்தி விடுவோமா


S. Narayanan
ஆக 05, 2024 14:27

பயிற்சி மையங்கள் மாணவர்கள் பற்றி கவலை படுவதில்லை மாறாக பணம் சம்பாதிப்பதில் குறியாக இருப்பதால் இந்த நிலை.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை