உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமூக ஊடகங்களில் ஆபாச பதிவுகள்; கடுமையான சட்டம் தேவை என்கிறார் அஸ்வினி வைஷ்ணவ்!

சமூக ஊடகங்களில் ஆபாச பதிவுகள்; கடுமையான சட்டம் தேவை என்கிறார் அஸ்வினி வைஷ்ணவ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'சமூக ஊடகங்களில் ஆபாசமான பதிவுகளை கட்டுப்படுத்த இன்னும் கடுமையான சட்டம் தேவை' என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். லோக்சபாவில் விவாதத்தின் போது,சமூக ஊடகங்களில் ஆபாசமான பதிவுகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து எம்.பி அருண் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்: நாங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் OTT தளங்களில் வக்கிரமான, ஆபாசமான பதிவுகளை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சமூக ஊடகங்கள் பத்திரிகை சுதந்திரத்திற்கான ஒரு ஊடகம். ஆனால் அது கட்டுப்பாடற்ற வெளிப்பாட்டிற்கான இடமாக மாறி உள்ளது. இதில் பெரும்பாலும் வக்கிரமான, ஆபாசமான பதிவுகள் அதிகம் உள்ளது.

கடுமையான சட்டம்

தற்போதைய சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டிய அவசியம் உள்ளது. சமூகவலைதளத்தில் இடம்பெற்று வரும் ஆபாச காட்சிகளை தடுப்பதற்கு ஏற்கனவே உள்ள சட்டங்களை கடுமையாக்குவது இந்தியாவிற்கு இன்றியமையாததாக அமைந்துள்ளது. இந்த பிரச்னைகள் குறித்து, பார்லிமென்ட் நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்ற விவாதங்கள் உலகில் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் நடத்தப்படுகின்றன. இந்த சவாலை எதிர்கொள்ள கடுமையான சட்டங்களுடன், மக்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

நிக்கோல்தாம்சன்
நவ 28, 2024 20:29

சொல்லிகிட்டே இருக்கீங்க செய்ய மாட்டேங்குறீங்க


Indian
நவ 28, 2024 13:37

நாளுக்கு நாள் மோசமான, சமுதாயத்தை சீர்குலைக்க கூடிய நிறைய பதிவுகள், அதிகம் வந்து கொண்டே உள்ளன.


MADHAVAN
நவ 28, 2024 12:23

மத்திய அரசு ஆவண படம் எடுத்துவிடுமா ?


hari
நவ 28, 2024 20:46

நீ அதை ...


mohan
நவ 28, 2024 12:08

நாளுக்கு ஆள் மோசமான சமுதாயத்தை சீர்குலைக்க கூடிய நிகழ்வுகள், அதிகம் வந்து கொண்டே உள்ளன... சீன இதில் இகவும் ஜாக்கிரதையாக உள்ளது..


Rengaraj
நவ 28, 2024 11:52

கருத்துசுதந்திரம் இருந்தாலும் இந்த மாதிரி சமூக ஊடகங்கள் முறையாக பதிவு செய்திருக்கப்பட்டிருக்கவேண்டும். காலாண்டுக்கு ஒருமுறை அல்லது அரையாண்டுக்கு ஒருமுறை தாங்கள் சம்பந்தப்பட்ட ஊடகங்களின் பெயர், விலாசம், உரிமையாளர், விளம்பர வருமானங்கள், அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஆட்பட்டதா, நீதிமன்ற வழக்குகள் இவற்றை சந்தித்தனவா என்பது போன்ற விபரங்களை ஒரு வெள்ளை அறிக்கையாக குறைந்த பட்சம் ஒரு பக்க அளவில் மத்திய அரசுக்கு அளிக்கவேண்டும். பதிவுகள், தரவுகள் உண்மைத்தன்மைக்கு புறம்பாக இருப்பின் நீதிமன்றங்களுக்கு கட்டுப்படுவதாக அந்த அறிக்கையில் உறுதிமொழி கொண்டிருக்கவேண்டும். மத்திய அரசு பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களின் விவரங்களை தனது இணைய தளத்தில் பொதுவெளியில் அனைவரும் தெரிந்துகொள்ளுமாறு வெளியிட வேண்டும். சமூக ஊடக குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படவேண்டும்.


kantharvan
நவ 28, 2024 11:41

சட்டமெல்லாம் ஒகேதான்?? ஆனால் அதை அமுல்படுத்தினால் வாக்குச்சாவடி எல்லாம் சிறை சாலைகளில்தான் வைக்கோணும் ஏன்னா நம்ம கட்சிக்கார ஆபாச குண்டனுங்க எல்லாம் அங்கேதான் இருப்பானுவ???


Uuu
நவ 28, 2024 11:22

against political leaders


S.Martin Manoj
நவ 28, 2024 10:21

தற்பொழுது தேவையான ஒரு சட்டம் இது, விரைவாக கொண்டு வரபட வேண்டும்


pmsamy
நவ 28, 2024 10:15

கடுமையான சட்டம் வேணும்னா ஜனநாயகத்தை விட்டுடனும். அரேபிய நாடுகளில் கடுமையான சட்டங்கள் உள்ளன அதை பின்பற்றவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை