உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்ப்புக்கு பணிந்தது ஐசிஐசிஐ... குறைந்தபட்ச இருப்புத்தொகை மீண்டும் குறைப்பு

எதிர்ப்புக்கு பணிந்தது ஐசிஐசிஐ... குறைந்தபட்ச இருப்புத்தொகை மீண்டும் குறைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு, ஐசிஐசிஐ வங்கி புதிய சேமிப்பு கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஐசிஐசிஐ வங்கி இந்த மாதம் முதல், புதிதாக கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்கள் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகையை, ஐந்து மடங்கு உயர்த்தியது. நகர்ப்புறங்களுக்கு 10,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாகவும்; சிறிய நகரங்களுக்கு 5,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாகவும்; கிராமப்புறங்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும் உயர்த்தியது.இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கி புதிய சேமிப்பு கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இருந்த குறைந்தபட்ச இருப்புத்தொகையை விட ரூ.5,000 கூடுதலாகும். முன்பு, ரூ.10,000 ஆயிரமாக இருந்தது. அதேபோல, சிறிய நகரங்களுக்கு 25,000 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பழைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000ஆக தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும் ரூ.5,000 ரூபாயாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Bala Krishnan
ஆக 16, 2025 14:16

ஐசிசி வங்கியில் அக்கவுண்ட் வைப்பது வேஸ்ட் இவர்கள் நல்லா ஏமாற்றுவார்கள்.


ஆரூர் ரங்
ஆக 14, 2025 15:09

சிறிய அறிக்கை. அது எல்லா ஊடகங்களிலும் தலைப்புச் செய்தி. பின்னர் வாபஸ். அதுவும் செய்தி. ஆக செலவில்லாமல் விளம்பரம். நம்ப கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேன்கிறாராங்க.


Bhakt
ஆக 14, 2025 00:21

இப்போ HDFC Bank ஏத்திட்டான்


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 13, 2025 23:53

எனது ஐசிஐசிஐ வங்கிக்கணக்கில் ஒரு சல்லிக்காசு கூட கிடையாது. இவனுங்க கேவலமான செர்வீஸ் டிஸ்செர்வீஸ் காரணமாக மிகப்பெரிய அக்கவுண்ட்டை சியுபி மற்றும் கனரா வங்கிக்கு மாற்றி விட்டேன். கணக்கை மூட சொல்லி பலமுறை கேட்டுக்கொண்டும் இன்னமும் மூடாமல் நேரில் வந்து பார்ம் கொடு, மும்பைக்கு பார்ம் அனுப்பு, கால் சென்டருக்கு போன் பண்ணுன்னு டிசைன் டிஸைனா பாலை பாஸ் பண்ணிக்கிட்டு இருக்கானுங்க. நடுவில நடுவில ஹைதராபாத்திலி இருந்து எங்க செர்வீஸ் எப்படி இருக்குன்னு கால் போட்டு விசாரிக்கிறாங்க. மெண்டல் பசங்க. அப்பப்ப மினிமம் பேலன்ஸ் இல்லைன்னா அபராதம் போடுவோமுன்னு கடிதமும் வருது. ஆனா அக்கவுண்ட்டை குளோஸ் பண்ண விட மாட்டேங்குறாய்ங்க. இந்த பேங்கை மொத்தமா மூடிடலாம்.


Puratchi Veeran
ஆக 14, 2025 09:26

எல்லா பேங்கும் அப்படிதான், சர்வீஸ் இல்லைனு பொய் சொல்லாதிங்க


vijai hindu
ஆக 13, 2025 23:52

இந்த வங்கியில் யாரும் சேமிப்பு அக்கவுண்ட் கரண்ட் அக்கவுண்ட் தொடங்கக்கூடாது


V Venkatachalam
ஆக 13, 2025 22:35

சந்தா கொச்சார் மாதிரி இன்னொரு எம் டி மற்றும் சி இ ஓ போஸ்ட்டுக்கு ஆள் தயார் பண்ணிட்டாங்க போல. அவுங்க ரூ 3250 கோடி கடனை விடியோ கானுக்கு கடன் குடுத்த மாதிரி வரப்போறவங்க எவ்வளவு கடன் குடுக்கப்போறாங்கன்னு தெரியல.. ஒரு 16250 கோடியாவது குடுப்பாங்க. அதுக்கு பணம் வேணுமே..கட்டண உயர்வு அதுக்கு தான். சாராய வியாபாரி எவ்வளவு ஏத்துனாரு?


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 14, 2025 01:58

பிஎம் கேர்ஸ்க்கு எவ்வளவு கொடுத்தாங்க? அதை பொருத்து தான்


முருகன்
ஆக 13, 2025 22:09

இந்த வங்கியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 13, 2025 23:08

நேற்றே நான் என் அக்கவுண்டை க்ளோஸ் செய்துவிட்டேன்


முக்கிய வீடியோ