உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., வெற்றி பெற்றால் ஹரியானாவில் யார் முதல்வர்: கார்கே பதில்

காங்., வெற்றி பெற்றால் ஹரியானாவில் யார் முதல்வர்: கார்கே பதில்

புதுடில்லி: 'ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் தான் முதல்வரை தேர்வு செய்வார்கள், அதுதான் கட்சியின் அமைப்பு,' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.ஹரியானா மாநிலத்தில் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு அக்டோபர் 5ம் தேதி வாக்குப்பதிவும், 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. யார் முதல்வர் வேட்பாளர் என்பது பற்றி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் அளித்த பேட்டியில் கார்கே கூறியதாவது:காங்கிரஸ் கட்சியில், தேர்தலுக்குப் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் தான் யாரை முதல்வராக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். தற்போது எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. இதையே எல்லா இடங்களிலும் செய்கிறோம்,' என்றார்.காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றால், பூபிந்தர் ஹூடா, அவரது மகன் தீபேந்தர், கட்சியின் எம்.பி.,க்கள் குமாரி செல்ஜா மற்றும் ரந்தீப் சுர்ஜிவாலா போன்ற தலைவர்கள் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ