உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள்தொகை குறைந்தால் சமூகம் அழியும்: மோகன் பகவத்

மக்கள்தொகை குறைந்தால் சமூகம் அழியும்: மோகன் பகவத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாக்பூர்: “மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்தால், சமூகம் அழிந்துவிடும்,” என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிராவின் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஒரு சமூகம் வாழ மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் முக்கியமானது. சமீபகாலமாக அதன் விகிதம் குறைந்து வருவது கவலையளிக்கிறது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2.1க்கு கீழ் சென்றால், அந்த சமூகம் அழிந்து விடும். அதை வேறு யாரும் அழிக்க வேண்டாம். அது தானாகவே அழிந்து விடும் என லோக்சங்ய சாஸ்திரம் கூறுகிறது.கடந்த 1998 அல்லது 2002ல் வகுக்கப்பட்ட மக்கள்தொகை கொள்கை, அதன் வளர்ச்சி விகிதம் 2.1க்கு கீழ் சரியக் கூடாது என கூறுகிறது.எனவே, மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மூன்றுக்கு மேல் அதிகரிக்க வேண்டும். அது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Oviya Vijay
டிச 02, 2024 22:16

சங்கிகள் என்றைக்கும் பகுத்தறிவற்றவர்கள் என்று நான் கூறுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் நான் எனது முந்தைய கமெண்ட்டில் கடைசியாக தெளிவாக கூறியுள்ளேன். மக்கள் மனதில் நஞ்சை விதைக்காதீர்கள் என்று.


V RAMASWAMY
டிச 02, 2024 11:33

ஒரு சமூகம் எவ்வளவு மனைவிகளோ குழந்தைகளோ பெற்றுக் கொண்டாலும் அவர்களை பொருளாதார ரீதியில் காப்பாற்ற அந்த சமூக அமைப்புகள் பாடுபடுகின்றன, அம்மாதிரி இந்துக்கள் அமைப்புகளில் உண்டா? பிராமணர்கள் உட்பட எத்தனை ஏழை இந்துக்கள் ஒரு குழந்தையை வளர்க்கவே கஷ்டப்படுகிறார்கள்? இவற்றிற்கெல்லாம் ஒரு வழி அமைத்தால், இந்துக்களும் ஜனத்தொகையை பெருக்குவார்கள்.


Oviya Vijay
டிச 02, 2024 11:18

கோமாளியின் கருத்து... இது ஏதோ இந்தியாவில் மட்டும் ஒரு சமூகத்தின் மக்கள் தொகை குறைவது போல் பேசுவது... உலகம் முழுவதும் இதே நிலை தான். மக்கள் தொகையில் முதலிடத்தில் இருந்த சீனாவை பின்னுக்குத் தள்ளி நம் நாடு முதலிடம் பிடித்தாயிற்று. இன்னும் என்னவாம்??? ஒரு மதத்தினர் மட்டும் அதிகம் குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று தேவையில்லாததை மக்கள் மனதில் விதைப்பது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை. அவர்கள் ஹிந்து மதத்தினரை தாம்பத்தியம் கொள்ளாமல் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளுங்கள் என்று பிரச்சாரம் செய்யவில்லை. அடுத்த மதத்தை சீண்டிக் கொண்டிருப்பதே ஆர் எஸ் எஸ் போன்றோரின் வேலை. அதனை தொண்டர்கள் எனும் பகுத்தறிவு அற்ற கூமுட்டைகள் அப்படியே துதி பாடுவர்... தயவுசெய்து மக்கள் மனதில் நஞ்சை விதைக்காதீர்கள்.


Anonymous
டிச 02, 2024 15:34

நீங்க காழ்ப்புணர்ச்சி காரணமாக எவ்வளவு பெரிய கோமாளி என்று காட்டி விட்டீர்கள், அவர் என்ன இந்து சமூகம், இஸ்லாமிய சமூகம் என்று குறிப்பிட்டு பேசினாரா? அதெப்படி கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தாமல், இஸ்லாமியர்களை சொல்கிறார், இந்துக்களை சொல்கிறார்னு இப்படி வெட்கமே இல்லாமல் கருத்து போட உங்களால முடியுது? தீயமுகாவின் பயிற்சியா?


ஆராவமுதன்,சின்னசேலம்
டிச 02, 2024 15:40

நேற்றுதான் நான் ஒரு அக்மார்க் இந்துன்னு நீயே சர்டிபிகேட் கொடுத்துக்கிட்ட இப்ப என்னடான்னா அப்படியே உல்ட்டாவா பேசுற முயல் புடிக்கிற மூஞ்சிய பாத்தா தெரியாது யாருன்ற லட்சணம்? ஓட்டுனது போதும் ரீல் அந்து போச்சு....


ஆரூர் ரங்
டிச 02, 2024 11:03

இவர் கூறுவது தெற்கு, மத்திய கேரளாவிலும் ஏற்கனவே உள்ள நிலைமை. இளைஞர்களே இல்லாமல் முதியவர்கள் மட்டும் வாழும் ஊர்கள். மேலும் பூட்டியே கிடக்கும் இலட்சக்கணக்கான வீடுகளை அங்கு காணலாம். (முழுக்க மணியார்டர் பொருளாதாரம்). தற்கால மருத்துவம் சராசரி வாழ்நாளை அதிமாக நீடித்துள்ளது .ஆனால் திடகாத்திரமான முதியவர்களை உருவாக்கத் தவறிவிட்டது.


Dharmaraj
டிச 02, 2024 10:58

சரிதான். ஆனா, இதை இந்நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களும் உணரணும். ஆனா, குறிப்பிட்ட சமூகம் வதவதன்னு பெத்து போடும். ஆனா, இன்னொரு சமூகம் அப்படி இல்லாம போனா..... குடும்ப கட்டுப்பாட்டை பின்பற்றும் சமூகம் காலப்போக்கில் அழிந்தேவிடும். அதைதான் திரு.மோகன் பகவத் தொலைநோக்கான பார்வையில் சொல்றார். அவர் சொல்றது சரிதான்.


Haja Kuthubdeen
டிச 02, 2024 11:39

எந்த விசயமானாலும் மறைமுகமாகவோ நேரடியாக இஸ்லாத்தை இழுக்காமல் உங்களை போன்றவர்களுக்கு தூக்கமே வராது..அரசு 2 குழந்தைகள்தான் பெற்று கொள்ளனும் அதற்குமேல் பெற்றால் அதற்கு சலுகையோ உரிமையோ கிடைக்காது என்று நாட்டு மக்கள் அனைவருக்குமே அதான் என்று சட்டம் இயற்றினால் அதை முஸ்லிம்களும்தான் கட்டாயம் பின்பற்றியாகனும் பின்பற்றுவார்கள். வதவன்னு பெற்று தள்ள பெண்கள் ஒன்றும் பிள்ளை பெற்கும் இயந்திரம் இல்லை.ஒருபிள்ளையை பெற்றெடுத்து கல்வி மற்ற மற்ற செலவுகள் செய்ய நாக்கு தள்ளுது..இது அனைத்து மக்களுக்குமே உள்ள நிலை.முஸ்லிம் வெறுப்புனர்ச்சியிலேயே அனைத்தையும் சிந்தித்தால் உங்கள் தூக்கம்தான் கெடும்.


SUBBU,
டிச 02, 2024 10:48

My real anger is with the historians. How could Nehrus attempt to cover up the genocide of Hindus in Pakistan not be exposed and discussed? It was carefully hidden from view. Meanwhile, historians spent their time Smearing the RSS.


Sundar R
டிச 02, 2024 10:18

விலைவாசி உயர்வு, குறைந்து வரும் வேலைவாய்ப்புகள் ஆகியவை அதிகமாக குழந்தைகள் பெற்றுக்கொள்ள தடையாக இருக்கும் காரணிகள். ஒரே ஒரு குழந்தையின் வளர்ப்பு, கல்வி ஆகியவற்றுக்கே ஏராளமாக செலவாகிறது. நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால் செலவழிக்க பணமேது? ஆனாலும், உயர்திரு மோகன் பாகவத் அவர்கள் காரணமில்லாமல் சொல்ல மாட்டார். அதிகமாக குழந்தைகள் பெறுவதில் இருக்கக்கூடிய பொருளாதார சிக்கல்களை அவரிடம் விவாதித்தால் அவைகளை சமாளிப்பதற்கும் தகுந்த வழிமுறைகளைச் சொல்லுவார்.


வைகுண்டேஸ்வரன்
டிச 02, 2024 10:12

இந்தியா நாசமாப் போறதுக்கு என்னென்ன வழிகள் இருக்கோ அவை எல்லாவற்றையும் தேடிப்பிடித்து பேசுகிறார்கள். ஏற்கனவே எல்லா இடங்களிலும், கூட்டம், நெரிசல், வேலையில், உணவு உற்பத்தியில், உடை உற்பத்தியில், வீடுகளில், வீடு கட்ட நிலம், விவசாயம் பண்ண என்று எல்லாவற்றிலும் பற்றாக்குறை. இதில் இன்னும் மக்கள் தொகை அதிகரிக்க வேண்டுமாம். பொருளாதார வல்லுநர் சொல்லிட்டாரு.


Mettai* Tamil
டிச 02, 2024 10:34

நம் நாட்டில் அனைவருக்கும் பொதுவான சட்டம் இல்லாததால், மத சட்டத்தை பின்பற்றும் முஸ்லீம் மக்கள் மட்டும் குடும்ப கட்டுப்பாட்டை கடைபிடிப்பதில்லை. பொது சிவில் சட்டம் வரும் வரைக்கும் ,இந்த மாதிரி தான் பேச வேண்டியிருக்கும் ...


Edward,Aruppukkottai 626125
டிச 02, 2024 11:19

ஓங்கோலில் இருந்து வந்த ஒருவர் ஒற்றை ஆளாக உழைத்து சம்பாதித்து இன்று அவரது குடும்பம் இந்தியா முழுவதும் ஆலமரம் போல் விழுதுகள் பரப்பி தமிழகத்தை ஆக்கிரமித்து கொண்டது எல்லாம் உன்னைப் போன்ற திமுக கொத்தடிமைக்கு தெரியாது.


vbs manian
டிச 02, 2024 09:53

பல நாடுகளில் இது நடந்துள்ளது. சமீப உதாரணம் லெபனான்.


Indian
டிச 02, 2024 09:30

ஏற்கனவே 145 கோடி மக்கள் , அதை 245 கோடி ஆகணும் என்று சொல்ல வாராரா ??. ஏற்கனவே ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர் ...


Tamilselvan,kangeyam638701
டிச 02, 2024 10:33

உனக்கு இங்கே இருக்க பிடிக்கலைன்னா உன்னோட டொப்பிள் கொடி நாட்டுக்கு போய் சந்தோஷமா போயிரு அங்கதான் தேனும் பாலும் ஆறாக ஓடுதாம்...


புதிய வீடியோ