உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனியும் அமைதி காத்தால் ஹிமாச்சல் இருக்காது: சுற்றுச்சூழலை பாதுகாக்க ஐ.நா., வலியுறுத்தல்

இனியும் அமைதி காத்தால் ஹிமாச்சல் இருக்காது: சுற்றுச்சூழலை பாதுகாக்க ஐ.நா., வலியுறுத்தல்

நம் நாட்டின் வடக்கே, இமயமலையை ஒட்டி அமைந்துள்ள மாநிலம் ஹிமாச்சல பிரதேசம். விவசாயம், தோட்டக்கலை, சுற்றுலா ஆகியவை தான் இம்மாநிலத்தின் பிரதான தொழில்கள். மலைகள் சூழ்ந்த இந்த மாநிலம், குளிர்காலத்தில் பனி சூழ்ந்து வெண்போர்வை போர்த்தியது போல ரம்மியமாக காட்சியளிக்கும். சமீபகாலங்களாக அதிகரித்து வரும் இயற்கை பேரிடர்கள், ஹிமாச்சல் மக்களை வெகுவாகவே கவலை அடைய வைத்திருக்கிறது. மேகவெடிப்பு அதற்கு மிக முக்கிய காரணம் காடுகள் அழிப்பு. இதனால், பருவநிலையில் ஏற்பட்ட மாறுபாடு, அதன் விளைவுகளை கண்கூடாக காண்பித்து வருகிறது. ஐ.நா.வின் வளர்ச்சி திட்ட அமைப்பும் ஹிமாச்சல பிரதேசம் மிக ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக அறிக்கை வெளியிட்டு எச்சரித்துள்ளது. பருவநிலை மாறுபாட்டுக்கான காரணிகளை கட்டுப்படுத்த தவறினால், விபரீதங்கள் விளையும் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. க டந்த நான்கு ஆண்டு களில் மட்டும் பருவநிலை மாறுபாட்டால் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி, 1,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட, 46,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. பருவநிலை மாறுபாட்டால் ஒருபுறம் வெப்பம் அதிகரித்து பனிப் பாறைகள் உருகி, புதிதாக ஏரிகள் உருவாகின்றன. இதனால், மலை மாவட்டங்களில் எதிர்பாராத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. மற்றொருபுறம், மேகவெடிப்பால் அளவுக்கு அதிகமாக மழை பொழிகிறது. கடந்த ஜூன் 1 முதல் செப்., 6 வரை, நாள் ஒன்றுக்கு, 10 செ.மீ., வரையிலான மழை சர்வசாதாரணமாக ஹிமாச்சலில் பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 46 சதவீதம் அதிகம். இதனால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற பேரிடர்களில் சிக்கி ஹிமாச்சலில், 366 பேர் உயிரிழந்துள்ளனர்; 4,800 கோடி ரூபாய் அளவு க்கு பொதுச் சொ த்துக்கள் சேதமடைந்துள்ளன. மூன்று மடங்கு காட்டுத் தீயும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2022 - 23ல், 856 காட்டுத்தீ சம்பவங்கள் நிகழ்ந்த நிலை யில், 2024 - 25 காலகட்டத்தில் அது, 2,580 சம்பவங்களாக உயர்ந்துள்ளது. இது பருவநிலை மாறுபாட்டின் ஆழமான தாக்கத்தை உணர்த்துகிறது. விதிகளை மீறி எழுப்பப்படும் கட்டடங்கள், பெருகும் உள்கட்டமைப்பு வசதிகளே, இயற்கை சமநிலை இழப்பதற்கு முக்கிய காரணம். எனவே, உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கிக் கொண்டே செல்வதை கட்டுப்படுத்துவது, திடக் கழிவு மேலாண்மையை வலுவாக பின்பற்றுவது, சுற்றுலா மண்டலங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைள் அவசியம் எடுக்கப்பட வேண்டும் என, ஐ.நா.,வின் அறிக்கை வலியுறுத்துகிறது. கடந்த, 1901 முதல் ஹிமாச்சலில் சராசரி வெப்பநிலை, 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு உயர்ந்து இருப்பதாக ஒரு தரவு சொல்கிறது. நடவடிக்கை சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், இது மேலும் அதிகரித்து இந்த நுாற்றாண்டின் மத்தியில், 3 டிகிரி செல்ஷியசாக உயரக்கூடும் என, வெளியான தரவுகள் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. அளவுக்கு அதிகமான வெயிலும், மழையும், விவசாயம் மற்றும் தோட்டக்கலை தொழில்களுக்கு வேட்டு வைத்து வருகின்றன. ஒரு காலத்தில் ஆப்பிள் அறுவடை தான் ஹிமாச்சலின் பொருளாதார வளர்ச்சிக்கு முது கெலும்பாக இருந்தது. தற்போது அதற்கு உகந்த சூழல் இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் மாதுளை மற்றும் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். கடந்த, 2001 - 23 வரையிலான காலகட்டத்தில் மட்டும் வளர்ச்சி என்ற பெயரில், 27,000 ஏக்கர் பரப்பளவுக்கு காடுகள் அழிக்கப்பட்டு உள்ளன. இது இயற்கையின் சமநிலையை அசைத்ததால், தற்போது அதன் விளைவு களை ஹிமாச்சல் அறுவடை செய்து வருகிறது. இனியும், சுற்றுச் சூழலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், விளைவுகள் படுமோசமாக இருக்கும். அதற்குள் மத் திய, மாநில அரசுகளும் , மக்களும் விழித்துக்கொள்ள வேண்டும். - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ