உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புறக்கணிப்பு நிச்சயம்!

புறக்கணிப்பு நிச்சயம்!

ஜம்மு - காஷ்மீர் இளைஞர்களை ஏமாற்றுவது மட்டுமே பா.ஜ.,வின் கொள்கை. அங்கு 2019 முதல், 65 சதவீதம் அரசு துறை பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அரசு ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை. இது போன்ற காரணங்களால், காஷ்மீர் இளைஞர்கள் பா.ஜ.,வை புறக்கணிப்பது நிச்சயம்.மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்

பா.ஜ., தான் காரணம்!

ஜம்மு- - காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை தேதியை, பா.ஜ.,வின் விருப்பப்படி தேர்தல் கமிஷன் மாற்றியுள்ளது. பா.ஜ.,வுக்கு எது சாதகமாக இருக்குமோ, அதையே தேர்தல் கமிஷன் செய்யும். நான் லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட போதும், தேவையில்லாமல் தேர்தல் தேதியை மாற்றினர்.மெஹபூபா முப்தி, தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி

முட்டாள்தனமாக இல்லையா?

சட்டசபை என்ன நமாஸ் செய்யும் இடமா? அதற்காக சட்டசபைக்கு இடைவேளை விட வேண்டும் என்பது ஓட்டு வங்கி அரசியல். அமைச்சராக இருக்கும் நான் வியாழனன்று சாமி கும்பிடுவேன். அதற்காக ஒவ்வொரு வியாழனும் ஓய்வெடுக்க முடியுமா? இது முட்டாள்தனமாக இல்லையா?பிரகலாத் ஜோஷி மத்திய அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ