உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாகன உதிரி பாகங்களை இனி மூங்கிலில் செய்யலாம் குவஹாத்தி ஐ.ஐ.டி.,யினர் அசத்தல்

வாகன உதிரி பாகங்களை இனி மூங்கிலில் செய்யலாம் குவஹாத்தி ஐ.ஐ.டி.,யினர் அசத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவஹாத்தி: 'பிளாஸ்டிக்'கிற்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இந்திய மூங்கில் ரகத்தைப் பயன்படுத்தி, அதிக திறன் உடைய வாகன உதிரிபாகங்களை உருவாக்கி, அசாமின் குவஹாத்தி ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். வாகனங்களின் உட்புற வடிவமைப்புகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, நான்கு வித மூங்கில்களின் கலவையை, உயிரி அல்லது பெட்ரோலியம் அடிப்படையிலான பசைப்பொருளுடன் சேர்த்து, வேதியியல் வினைபுரிந்ததில் பாலிமர் போன்ற மூலப் பொருள் உருவாக்கப்பட்டது. அதை பயன்படுத்தி, வாகன உதிரிபாகங்களை ஐ.ஐ.டி., ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். வாகனங்களின் டேஷ்போர்டு, டோர் பேனல் மற்றும் சீட் பின்புறம் உள்ளிட்டவற்றில் இதை பயன்படுத்தலாம். கிட்டத்தட்ட 17 விதமான தரப்பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அதிக வலிமை, உயர் வெப்பநிலையில் தாக்குப்பிடித்தல், குறைந்தளவு ஈரப்பதத்தை தக்க வைத்தல் ஆகியவற்றோடு, மிக குறைந்த விலையில் தயாரிக்க முடியும் என கண்டறிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Mohan
ஜூலை 25, 2025 10:18

எப்பா IIT ன்ஸ் கொஞ்சம் இந்த மணலுக்கு பதிலை எதாவது முடியுமான்னு பாருங்க ப்ளீஸ் ..எங்க ஊர்ல கொள்ளையோ கொள்ளை ..மண்ணே இல்ல ..அப்பறோம் கொசு அழிக்க எதாவது தொழில் நுட்பம் கண்டுபுடுச்சு குடுங்க புண்ணியமா போகட்டும் ...முடியல


அப்பாவி
ஜூலை 25, 2025 10:08

அடுத்து இஞ்சினும் செஞ்சு அசத்துங்க.


Barakat Ali
ஜூலை 25, 2025 08:54

தொழில் ரீதியாக இதைச்செய்ய என்னென்ன சவால்கள் ஏற்படும், அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பதைப்பற்றி ஆராய மத்திய அரசு ஒரு ப்ராஜெக்ட் துவக்க வேண்டும் ..... அதுவும் உடனடியாக ......


palaniappan. s
ஜூலை 25, 2025 08:54

வாழ்த்துக்கள்


N.Purushothaman
ஜூலை 25, 2025 07:35

வாழ்த்துக்கள் ..இந்திய நிறுவனங்கள் இதை செயல்படுத்த விரைவுப்படுத்த வேண்டும் ...


Barakat Ali
ஜூலை 25, 2025 08:53

செயல்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் பல கட்ட பரிசோதனைகள் தேவைப்படலாம் ஜி ......


Kasimani Baskaran
ஜூலை 25, 2025 03:47

அருமை..


சமீபத்திய செய்தி