உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான் இன்னும் பொறுப்பில் தான் இருக்கிறேன்: குறுக்குபுத்தி வழக்கறிஞர் மீது சந்திரசூட் காட்டம்

நான் இன்னும் பொறுப்பில் தான் இருக்கிறேன்: குறுக்குபுத்தி வழக்கறிஞர் மீது சந்திரசூட் காட்டம்

புதுடெல்லி: நான் பிறப்பித்த உத்தரவு விவரங்களை குறுக்கு வழியில் கோர்ட் மாஸ்டரிடம் ஆய்வு செய்ய உனக்கு என்ன துணிச்சல் என வழக்கறிஞர் ஒருவரை சகட்டு மேனிக்கு திட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் , நான் இன்னும் பொறுப்பில் தான் உள்ளேன் எனவும் அவரை கடிந்து கொண்டார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் கடந்த 2022 நவம்பரில் பதவியேற்றார். வரும் 10-ம் தேதி பணி நிறைவு பெறுகிறார். தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கின் விசாரணையின் போது , உரத்த குரலில் வாதாடிய வழக்கறிஞரை இது கோர்ட் ஹால், என்ன பார்த்து கத்தாதீங்க என்றார். கடந்த சில தினங்களுக்கு முன் வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் யா...யா.. என ஆங்கிலத்தில் உச்சரித்தார். உடனே கோபமடைந்த சந்திரசூட் ''அது என்ன, யா யா? இது என்ன காப்பி கடையா? இந்த வார்த்தையை கேட்டாலே அலர்ஜியாக உள்ளது என்றார்.இந்நிலையில் தாம் பணி நிறைவு பெறுவதையொட்டி தான் பிறப்பித்த உத்தரவு விவரங்களை கோர்ட் மாஸ்டருக்கு அனுப்பினார். அதனை வழக்கறிஞர் ஒருவர் குறுக்கு வழியில் ஆய்வு செய்ய முயற்சித்தார். இதையறிந்த சந்திரசூட், அந்த வழக்கறிஞரை அழைத்து நான் பிறப்பித்த உத்தரவு விவரங்களை கோர்ட் மாஸ்டரிடம் ஆய்வு செய்ய உனக்கு என்ன துணிச்சல், நாளை என் வீட்டிற்கு வந்து நான் என்ன செய்கிறேன் என எனது தனி செயலாளரிடம் கேட்பீர்களா ? வழக்கறிஞர்கள் எல்லாம் என்ன புத்தி இழந்துவிட்டார்களா ? கொஞ்ச காலம் என்றாலும் நான் இன்னும் பொறுப்பில் தான் இருக்கிறேன் என்றார். இந்நிலையில் சந்திரசூட் பணி நிறைவு அடைவதையெடுத்து சட்டப்பூர்வ பதவிக்கான அடுத்த வரிசையில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Anbuselvan
அக் 04, 2024 08:44

நீதிபதி அவர்கள் சிலவற்றில் சரியாக சொல்லி உள்ளார். சிலவற்றில் சட்டியில். யாயா என்பது நடைமுறை ஆங்கிலம் அதற்க்கு ஏன் அவருக்கு கோவம் வருகிறது என தெரியவில்லை.


shahrangap
அக் 04, 2024 09:46

What are to be maintenance decorum


sankar
அக் 04, 2024 09:51

கோர்ட்டில் பண்படுத்துவதெற்கெண்டு சில வார்த்தை உண்டு - சகட்டுமேனிக்கு எல்லாத்தையும் பேச முடியாது தம்பி


Barakat Ali
அக் 04, 2024 07:42

சந்திரசூட்டு ஒரு லோக்கல் / பேட்டை தாதா போல செயல்படுகிறார் ..... தீர்ப்புகளிலும் நியாயம் இருப்பதில்லை ..... அவர் இடம்பெறும் பெஞ்சின் ஒவ்வொரு தீர்ப்பிலும் இடதுசாரி மனப்பான்மை வெளிப்படுகிறது ......


karthik
அக் 04, 2024 08:45

பாரதம் முழுதும் உங்கள் சொத்து என்று தீர்ப்பு சொன்னால் இனிக்கும் உங்க கும்பல்களுக்கு


Dharmavaan
அக் 04, 2024 07:24

இவர் நடத்தை பேச்சு அநாகரீகமாக இருக்கிறது .டிக்னிட்டி காணப்படவில்லை


karthik
அக் 04, 2024 08:47

200 ருபாய் உபியா நீ? கருத்த பார்த்தாலே தெரியுது... திருட்டு தன்மை தீர்ப்பை தெரிஞ்சுக்க முயற்சி செய்த வக்கீலை ஒன்றும் சொல்லாமல் நீதிபதியை குறை சொல்ற பார்த்தியா அங்க தான் நீ ஒரு முரட்டு 200 ரூபாய் கொத்தடிமை என்று நிரூபிக்கின்றாய்


Kasimani Baskaran
அக் 04, 2024 05:35

நீதித்துறை கொலீஜியம் என்ற குழிக்குள் இருந்து வெளிவரவில்லை என்றால் அது பொதுமக்களுக்கு தொடர்பில்லாத ஒரு அமைப்பாகிவிடும்.


கிஜன்
அக் 04, 2024 03:30

பல்லாண்டுகளாக தீர்க்கப்படாத விவகாரங்களில் ....வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கி உள்ளீர்கள் .... பணி நிறைவு வாழ்த்துக்கள் ....


vadivelu
அக் 04, 2024 06:55

நாலு இருக்கு தெரியட்டும், அவை எவை ?


சமீபத்திய செய்தி