உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அணுசக்தியிலும் தனியாருக்கு வாய்ப்பு: அடுத்த புதிய சட்ட திருத்தம்; தயாராகுது மத்திய அரசு

அணுசக்தியிலும் தனியாருக்கு வாய்ப்பு: அடுத்த புதிய சட்ட திருத்தம்; தயாராகுது மத்திய அரசு

புதுடில்லி : நாட்டின் அணுசக்தி உற்பத்தியை அதிகரிக்க இதுவரை இல்லாத அளவிற்கு தனியார் மயத்திற்கு வழிவிட மத்திய அரசு தயாராகி வருகிறது. இதற்கென 1962ல் இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கனகச்சிதமாக வேலை நடந்து வருவதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் நிலையில் பழைய சட்டங்களை அகற்றியும், புதிய சட்ட திருத்தங்களையும் கொண்டு வந்து புதிய வழியை உருவாக்கி வருகிறது. காஷ்மீர் பிரிப்பு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, இந்திய குடியுரிமை சட்ட திருத்தம், சாதிவாரி கணக்கெடுப்பு, முத்தலாக் ரத்து, வக்ப் வாரிய சட்ட திருத்தம் , ஒன்ரேங்க் ஒன் பென்ஷன், இவ்வாறு பல சட்டங்கள் வடிவிற்கு வந்துள்ளன. இதன் இன்னொரு புதிய முயற்சியாக அணுசக்தி உற்பத்தியில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. வரும் மழைக்கால கூட்ட தொடரில் இந்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு வட்டார தகவல் தெரிவிக்கிறது.

20 ஆயிரம் கோடி நிதி

கடந்த பிப்ரவரி மாதம் மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இதற்கான ஒரு அறிவிப்பையும் வெளியிட்டார். இதன்படி ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் சிறிய அளவிலான அணு உற்பத்தி கூடங்கள் அமைக்கப்படும். தனியார் பங்களிப்பும் இதில் இருக்கும் . மேலும் 2033ம் ஆண்டுக்குள் ஐந்து சிறிய உலைகள் அமைக்கப்படும் என அறிவித்து இருந்தார்.புதிய அணுகுமுறையாக தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் கூட, அணுசக்தி உற்பத்தியில் நுழைய ஏதுவாக, 1962ம் ஆண்டு அணுசக்திச் சட்டத்தில் திருத்தங்கள் வரவுள்ளன.

தடைகளை நீக்கும்

இது தவிர, இந்தத் துறையில் முதலீட்டை ஈர்ப்பதற்காக பல பெரிய முடிவுகள் எடுக்கப்படும். இதற்காக, சட்டத்தில் உரிய மாற்றம் செய்யப்படும். உண்மையில், இந்திய அரசாங்கம் அணுசக்தித் துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்றே சொல்லலாம். இந்தத் திருத்தங்கள் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் தடையாக இருக்கும் சட்டத் தடைகளை நீக்கும். இந்த சட்டத்தில் 2 முக்கிய மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இது மிக பெரிய சவாலானதாகவே இருக்கும்.

விதியில் தளர்வு

அணு உலையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உபகரண விற்பனையாளர்களின் பொறுப்பை குறைக்கும் வகையில் அவர்களுக்கு ரிலீப் தரும்படியாக, அணுசக்தி சட்டத்தில் விதிகளில் தளர்வு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் ஒப்பந்தத்தின் அசல் மதிப்பிற்கு ஏற்ப பண இழப்பீட்டை கட்டுப்படுத்துவது, இந்தப் பொறுப்யில் சாத்தியமான கால வரம்பு நிர்ணயிக்க முடியும்.

20 ஜிகாவாட்டாக உயரும்

இதுவரை இந்தியாவின் அணுசக்தித் துறை முழுமையாக அரசு கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. இந்தத் துறையில் அணுசக்தி கழகம் நியூக்ளியர் பவர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட், (NPCIL) மற்றும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்ரேசன் லிமிடெட் (NTPC) போன்ற அரசு நிறுவனங்கள் மட்டுமே செயல்பட முடியும். நாடு முழுவதும் உள்ள 24 அணு மின் நிலையங்கள் மூலம் இந்தியா தற்போது 8.1 ஜிகாவாட் அணுசக்தி திறன் உற்பத்தி செய்கிறது. மேலும் 2032ம் ஆண்டுக்குள் இதை 20 ஜிகாவாட்டாக அதிகரிக்க முடியும் என அரசு நம்புகிறது.

20 ஆண்டுகளுக்கு முன்னர்

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு (20 ஆண்டுகளுக்கு) முன்னர் கையெழுத்தான இந்தியா-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை வணிக ரீதியாக வலுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Svs Yaadum oore
மே 19, 2025 15:35

அதானி கேட்கும் பொழுது இல்லை என்று சொல்ல முடியுமா ???....தமிழ் நாட்டில் G SQUARE , ரெட் ஜெயந்த் , சன் குழுமம் என்று லட்சம் கொடிகள் கொள்ளையடித்தால் இல்லை என்று சொல்ல முடியுமா ??....வாரி வாரி வழங்கவில்லையா ...அது போல இருக்கும் ..


ஆரூர் ரங்
மே 19, 2025 17:12

BOGORS காலத்திலேயே குத்ரோச்சீ க்கு எவ்வளவெல்லாம் விட்டுத் தந்தார்கள். இத்தாலிய தேசபக்தி அப்படி. ஆனால் இந்தியர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் தவறு.


Svs Yaadum oore
மே 19, 2025 15:31

பொதுத்துறை நிறுவனங்கள் என்றால் தமிழ் நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் மின் உற்பத்தியில் என்ன சாதனை செய்தது ??....தமிழ்நாடு மின்வாரியம் கடந்த 10 ஆண்டுகளில் வாங்கிய கடனுக்கான வட்டி 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது. ..கடந்த ஆண்டு நிலவரப்படி மின் வாரியத்தின் கடன் நிலுவை 1.60 லட்சம் கோடியாக உள்ளது. வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படுகிறது. ..பொதுத்துறை நிறுவனம் என்று இந்த கடனை யார் அடைப்பது ??.....இப்போது மேலும் மின் கட்டணம் அடுத்த மாதம் உயர்த்தப்படுமாம் ...


ராமகிருஷ்ணன்
மே 19, 2025 15:24

தனியார் வசம் மின்சார உற்பத்தி போன்ற மக்கள் நலன் சார்ந்த அணுசக்தி தொழில்களை தரலாம், அதுவும் மத்திய அரசின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அணு ஆயுதங்களை தனியார் உற்பத்தி செய்ய அனுமதிக்க கூடாது. மற்ற நாடுகளுக்கு எளிதாக விலை போயிடும்


Murthy
மே 19, 2025 15:08

ஆட்சியாளர்களுக்கு தரகு வேலை மட்டும்தான் போலும் . ...


Svs Yaadum oore
மே 19, 2025 17:05

ரெட் ஜெயந்த் , சன் , G SQUARE சாராய கம்பெனி என்று கார்பொரேட் தனியார் கம்பனிகளுக்கு விடியல் தரகு வேலை செய்யுது .....அது போல என்று சொல்றீங்களா.....


Sundar R
மே 19, 2025 14:47

For smaller countries, they can produce electricity through various sources like solar, biomass wastes, natural gas etc. In our Bharat, where our electricity need is in several Billion MW, nuclear energy is the only option. But, only Christian Missionary Political Parties in Tamil Nadu like the DMK, NTK, TVK, VCK, MDMK and MNM parties will pro against the nuclear energy. All the leaders of the Hindu and Muslim political parties should protect the Tamil Nadu people from the proing Christian Missionary Political Parties and their chamcha paid TV channels and other media. Smaller reactors will serve a larger areas in our country. They will give employment opportunities to many youngsters. This is a welcome step by our Central Government.


KRISHNAN R
மே 19, 2025 14:05

ஏற்கனவே சுற்றுப்புற சூழல் என்ன என்று தெரியவில்லை.... இதுவுமா


Bahurudeen Ali Ahamed
மே 19, 2025 13:48

அணுசக்தியையும் விட்டு வைக்கவில்லையா, பொதுத்துறை நிறுவனத்திற்கு என்னவானது ? பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவது வேதனையளிக்கிறது .


Apposthalan samlin
மே 19, 2025 13:30

அதானி கேட்கும் பொழுது இல்லை என்று சொல்ல முடியுமா ?


K.Uthirapathi
மே 19, 2025 12:38

அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்கள் இருக்கும் நிலையில், அணு உலைகள் அதிகரிப்பு நமக்கே ஆபத்தை விளைவிக்கும். எதிரிகள் அணு ஆயுத பிரயோகம் செய்யாமல், நமது அணு உலைகளை தாக்கினாலே, அணுகுண்டு தாக்குதலால் ஏற்படும் பேரழிவுகள் நமக்கு ஏற்படும்.


SANKAR
மே 19, 2025 13:07

for cheap and large scale power there is no alternative.as you say it is a risk but comes under the category of necessary evil