உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் கட்சி வங்கிக்கணக்கு முடக்கம்: சிறிது நேரத்தில் விடுவிப்பு: வருமான வரித்துறை நடவடிக்கை

காங்கிரஸ் கட்சி வங்கிக்கணக்கு முடக்கம்: சிறிது நேரத்தில் விடுவிப்பு: வருமான வரித்துறை நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்தல் நெருங்கும் நேரத்தில், இளைஞர் காங்கிரஸ் உட்பட காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் குற்றம்சாட்டினார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு, வங்கிக்கணக்குகள் விடுவிக்கப்பட்டதாக அக்கட்சி தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக அவர் கூறுகையில், பொது மக்களிடம் இருந்து நிதி பெறுவதற்காக உருவாக்கப்பட்ட வங்கிக்கணக்குகள், காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு, இளைஞர் காங்கிரசின் வங்கிக்கணக்கு உள்ளிட்டவை முடக்கப்பட்டு உள்ளது. தேர்தல் அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது ஜனநாயக நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. ரூ.210 கோடி வரி பாக்கிக்காக வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இது அரசியல் ரீதியானது. காங்கிரசின் தேர்தல் நடவடிக்கைகளை முடக்குவதற்காக எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rn1boc5k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட அறிக்கையில், ‛‛ மோடி பயப்பட வேண்டாம். சர்வாதிகாரத்திற்கு நாங்கள் தலைகுனிய மாட்டோம். காங்கிரஸ் பணத்தின் வலிமையால் இயங்கும் கட்சி அல்ல. மக்களின் வலிமையால் இயங்கும் கட்சி'' என தெரிவித்து இருந்தார்.காங்கிரஸ் தலைவர் கார்கேயும், வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டது இந்திய ஜனநாயகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என விமர்சனம் செய்திருந்தார்.பிறகு காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ததாகவும், இதன் பிறகு முடக்கப்பட்ட வங்கிக்கணக்குகள் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kasimani Baskaran
பிப் 16, 2024 21:29

புதிதாக ஏன் கணக்குத்தொடங்கினார்கள் என்பது புரியாத புதிர்..


Manickam Mani
பிப் 16, 2024 20:28

தேர்தல் செல்லாது என்று நீதி மன்றம் அறிவித்த உடன் நாட்டில் அவசர நிலையை அறிவித்து கொடுங்கோல் ஆட்சி புரிந்த கட்சிக்காரன் சர்வாதிகாரம் பற்றி உளறுகிறான்.


தாமரை மலர்கிறது
பிப் 16, 2024 19:52

காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகளின் திருட்டு வங்கிக்கணக்கை முடக்க வேண்டும். பணத்தை கொடுத்து தான் திமுக ஜெயிக்கிறது.


N SASIKUMAR YADHAV
பிப் 16, 2024 16:32

210 கோடி ரூபாய் சாதாரணமாக போய்விட்டது இவர்களுக்கு . அதுசரி விஞ்ஞானரீதியான ஊழல்செய்யும் களவானிங்களுக்கு 210 கோடி ரூபாய் சாதாரணமாகத்தான் தெரியும்


Ganapathy
பிப் 16, 2024 16:20

கடந்த 14ம் தேதியே இவர் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸின் வங்கிக் கணக்கு இரண்டையுமே வருமான வரித்துறை முடக்கியும் இவன் ஏன் அதைப்பற்றி பேசவில்லை? எப்படியாவது இந்த அசிங்கமான ஊழலை அரசியலாக்கி தப்பிக்க நினைத்தேனே இந்த காங்கிரஸ் காந்தி பொய்யன் வாய் திறக்கவில்லை? 2019ல் இருந்து வருமான வரித்துறை பல முறை கேட்டும் 210 கோடிக்கு கணக்கு கொடுக்க முடியாத நிலையில் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு மீண்டும் ட்ரிப்யூனலுக்கு காங்கிரஸ் சென்று காலைப்பிடித்து காங்கிரஸ் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது உதவ வேண்டிம்னு கேட்டுக்கிட்டதால் தற்காலிகமாக முடக்கிய கணக்கை ரிலீஸ் செய்த உண்மையான நிலையை மக்களிடமிருந்து இவன் வழக்கம்போல மோதிமேல வெட்கமில்லாம பழிப்பது தப்பிக்க பார்க்கிறான்.


krishnamurthy
பிப் 16, 2024 15:51

இருநூற்று பாத்து கோடி பாக்கி எனும்போது விடுவித்தது எப்படி.


Seshan Thirumaliruncholai
பிப் 16, 2024 15:30

ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன? நன்கொடை மூலம வருமானம் உள்ளவர்கள் முடங்கிய பணத்தை வெளிக்கொணர்க்கிறார்கள். நல்லதுதானே. மக்கள் கைக்கு போய் சேருகிறது. இதுவும் முறையானதுதானே.


Krishnamurthy Venkatesan
பிப் 16, 2024 14:24

210 கோடி வரி பாக்கி வைத்துள்ளதை பற்றி யாரும் கேட்கவில்லை.


sahayadhas
பிப் 16, 2024 13:20

அனைத்து அரசியல்வாதிகள் குறிப்பா BJP கணக்கை முடக்க வே ண்டும


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை