உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார், ஏசி, டிவி விற்பனை அதிகரிப்பு: ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் என நிர்மலா சீதாராமன் பெருமிதம்

கார், ஏசி, டிவி விற்பனை அதிகரிப்பு: ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் என நிர்மலா சீதாராமன் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி விற்பனை அதிகரித்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகிய 3 பேரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது நிர்மலா சீதாராமன் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9c8o4l8y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டன; இந்திய மக்கள் அதனை ஏற்றுக்கொண்டதாக நான் உணர்கிறேன். ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் நுகர்வோருக்கு பலன் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி விற்பனை அதிகரித்துள்ளது. அரசு தினசரி பயன்படுத்தும் 54 பொருட்களை உன்னிப்பாக கண்காணித்து வந்தது. வரிச்சலுகையால் நுகர்வோர் பலன் அடைந்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. பொது மக்களின் நலன் கருதி மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. ஆட்டோ மொபைல் துறையில் விற்பனை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தற்சார்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

வரவேற்பு

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: நவராத்திரியின் முதல் நாளன்று கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தம் வரவேற்பை பெற்று இருக்கிறது. பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன் அடைந்து வருகின்றனர். வியாபாரம் அதிகரித்துள்ள அதே நேரத்தில் சேமிப்பும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இரட்டை இலக்கு!

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: மின்னணுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. மின்னணு உற்பத்தி இப்போது இரட்டை இலக்கை அடைந்துள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் காரணமாக, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் மின்னணுப் பொருட்கள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

RAAJ68
அக் 19, 2025 08:48

நாளைக்கு தீபாவளி பண்டிகை. ஆனால் எங்கள் வீட்டில் கிடையாது. காரணம் செலவுக்கு பணம் இல்லை. நீங்கள் என்னவென்றால் கார் விலை குறைந்து விட்டது மக்கள் மகிழ்ச்சி டிவி விலை குறைந்து விட்டது விற்பனை அதிகரிப்பு என்று எங்களைப் போன்ற வசதி இல்லாதவர்களின் வயிற்றெரிச்சல கிளப்புகிறீர்கள்.


RAAJ68
அக் 19, 2025 08:45

அரிசி விலை என்பது ரூபாய்... கிடங்குகள் இல்லாமல் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிறது... மத்திய அரசு சார்பில் தமிழ்நாட்டில் கிடங்குகள் கட்டித்தர உதவினால் நன்றாக இருக்கும். எந்த கட்சியை தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தாலும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிறது யாருக்கும் அக்கறை இல்லை தேவை இல்லாமல் கோடி கணக்கில் வீணாக செலவு செய்கின்றனர்.


Nathansamwi
அக் 18, 2025 21:41

இதுக்கு முன்னால 28 % வரி இவங்க ஏத்தினப்போ விற்பனை கம்மி ஆனதும் இவங்கனால தானே ? இவர்களே வரி ஏத்திட்டு இப்போ கம்மி பன்றாங்க ...


Padmasridharan
அக் 18, 2025 21:32

Green house gases ஐ குறைக்க சொல்றாங்க அப்புறம் car, AC வாங்கவும் வைக்கறாங்க. .


R chandar
அக் 18, 2025 19:45

The reduction should have been done longtime back , sales increases due to reduction in prices because of gst reduction at the same time income tax limit also raised to Rs 12 Lakhs. Actually this limit to be raised to 15 Lakhs and interest on TDS on bank deposit also could have been exempted from tax, this way increase the money circulation and the same can be used for investment on industries and promote infrastructure development of country. Government should think on investment in good company and earn dividend instead of keeping eye on collecting tax alone. This way of thought could get more employment and promote new industry and lead to increase more people in to tax bracket of indirect tax. Government should think on this.


GMM
அக் 18, 2025 19:26

கார், டிவி ஏற்றுமதி பலன் தரும். உள்நாட்டு விற்பனை தனி நபர் செலவை அதிகரிக்கும். வரி செலுத்தும் நபர், நிறுவன குறை தீர்க்க வேண்டும். திராவிட கடைகள் வாடகை. அரசு கைபற்றி வாடகை நிர்ணயிக்க வேண்டும். நடை பாதை கடைகள் வரி செலுத்தும் கடைக்கு 1000 மீ தூரம் தள்ளி இருக்க வேண்டும். முதல் கடை அருகில் புதிய அதே பொருள் கடை அமைக்க இடை வெளி வழிமுறைகள். லஞ்சம், கட்சி வசூல் தடுக்க முடியாது. வழிபாட்டு ஸ்தலம் அமைக்க உள்ளூர் மக்கள் அனுமதி பெற வேண்டும். gst - மாநிலம் பெறுவதால் , மாநில வரி வருவாயில் gst கவுன்சில் பங்கு பெற வேண்டும். உதாரணம் டாஸ்மாக், கேரளா லாட்டரி. அதன் பின் பெருமை படலாம்.


R Dhasarathan
அக் 18, 2025 19:18

ஒரு திட்டத்தையும் ஒழுங்காக அமல் படுத்துவது இல்லை...


திகழ்ஓவியன்
அக் 18, 2025 19:01

இத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டவர்களுக்கு இப்போது பலன் கொடுத்துள்ளீர்கள். ஆனால், இத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டபோது இந்த பலன் கொடுக்க உங்களுக்கு ஏன் தோன்றவில்லை? இந்த கஷ்டத்தை அறிமுகப்படுத்தியபோது அது ஏன் உங்களுக்கு தோன்றவில்லை?


மனிதன்
அக் 18, 2025 18:33

இதெல்லாம் டம்மி பீசு., கணவரை கேளுங்கள் கதை கதையாக சொல்லுவார்... மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அமைச்சர்...பொருளாதாரம் பற்றி தெரியாதவர்களால் இயக்கப்படும் பொம்மை....


Gokul Krishnan
அக் 18, 2025 18:30

First a problem, then reduce the impact of the problem, then take credit that you solve the problem. Very simple


புதிய வீடியோ